கடந்த 2009ம் ஆண்டு ஒளிபரப்பான தென்றல் என்ற நாடகத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டியவர் காயத்ரி யுவராஜ்.
அதன்பின் அழகி, பொன்னூஞ்சல், மோகினி, களத்து வீடு, பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார்.
யுவராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டு 13 வயதில் மகன் இருக்கும் நிலையில் அண்மையில் இவர்களுக்கு 2வது பெண் குழந்தை பிறந்தது.
வீட்டில் விசேஷம்
குழந்தை பிறந்த பிறகு வளசரவாக்கத்தில் கட்டியுள்ள புதிய வீட்டின் பூஜையை செய்தவர்கள் இப்போது அந்த வீட்டின் மேல் தளத்தை நீட்டிக்கும் பணியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பதிவிட மக்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.