சுனாமி கிராமத்தில் படையெடுக்கும் நாக பாம்புகள்

413

காலி- வலந்துவ மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள சுனாமி கிராமத்தில் நாக பாம்புகள் படை எடுப்பதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் நாக பாம்புகள் அதிகளவில் வருவதாக கூறப்படுகிறது.

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்ததின் பின்னர், கரையோரத்தில் வசித்து வந்த 54 குடும்பங்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்று இந்த கிராமத்தில் வீடுகளை கட்டிக்கொடுத்தது.

9 வருடங்களாக கிராமத்தில் வாழ்ந்து வந்த தாம், நாக பாம்புகளை கண்டதில்லை எனவும் அண்மைய காலமாக பாம்புகள் அதிகளவில் வருவதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.கடந்த இரண்டு தினங்களில் பாம்புகளை பிடிக்கும் நபர் 5 நாக பாம்புகளை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE