சுயநல சமூகத்தில் பிறர்நலம் சிந்திக்கும் அரிய மனிதர் அவர்! தமிழக வீரர் அஸ்வின் வியந்து கூறியது யாரை தெரியுமா?

95

 

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா பிறர் நலம் பற்றி சிந்திக்கும் அரிய மனிதராக காணப்படுவதாக தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

போட்டியில் இருந்து வெளியேறிய அஸ்வின்
ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நடுவே, ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) பாதியில் விலக நேரிட்டது.

அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

அப்போது அணித்தலைவர் ரோஹித் சர்மா (Rohit Sharma), நிலைமையை கையாண்ட விதம் மூலம் அவரை சிறந்த தலைவர் என்று தனது யூடியூப் சேனலில் பேசும்போது அஸ்வின் குறிப்பிட்டார்.

தோனியுடன் ஒப்பீடு
மேலும் அவர் ரோஹித் சர்மா குறித்து கூறுகையில், ‘நான் பல கேப்டன்கள் மற்றும் தலைவர்களின் கீழ் விளையாடியிருக்கிறேன். ஆனால், தோனிக்கு இணையான 5 ஐபிஎல் பட்டங்களை பெற்ற ஒருவரான ரோஹித்தின் நல்ல உள்ளம் தான் அவரை இன்றைய நிலையில் வைத்துள்ளது. கடவுள் எளிதாகக் கொடுப்பதில்லை.

அதற்கு எல்லாவற்றையும் விட பாரிய ஒன்றை அவர் பெற வேண்டும், அப்போது கடவுள் அவருக்கு கொடுப்பார். இப்படிப்பட்ட சுயநல சமூகத்தில் பிறர் நலம் பற்றி சிந்திக்கும் மனிதன் அரிதாகவே காணப்படுகிறார்.

அதன் பிறகு, அவர் மீது எனக்குள்ள மரியாதை அபரிமிதமாக வளர்ந்தது. ஒரு தலைவராக அவர் மீது எனக்கு ஏற்கனவே மரியாதை இருந்தது. அவர் கடைசி நிமிடம் வரை கேள்வியின்றி ஒரு வீரரை ஆதரிக்கிறார்.

இது எளிதான விடயம் அல்ல. தோனியும் அதைத்தான் செய்கிறார், ஆனால் ரோஹித் இன்னும் 10 அடிகள் முன்னெடுத்து வைக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

SHARE