சுயநல சூழ்ச்சித் திட்டத்தால் வட மாகாணத்தில் 5 ஆசனங்களை இழந்த தமிழரசுக்கட்சி..!

39
சுயநல அடிப்படையில் சுமந்திரன் வகுத்த சூழ்ச்சித் திட்டத்தால், வடமாகாணத்தில் குறைந்த பட்சம் 5 ஆசனங்களை தமிழரசுக்கட்சி இழந்துள்ளது.
சுமந்திரனின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தேர்தலுக்கான வேட்பாளர் குழு அமைக்கப்பட்டது. இதற்கு மத்தியகுழுவிலுள்ள சுமந்திரனின் பெரும்பான்மை கையாட்கள் ஆதரித்தனர்.
அந்த 8 வேட்பாளர்களும் சுமந்திரனுக்கு எப்படியாவது வாக்குச் சேர்த்து வெற்றி பெறச் செய்வதற்காக உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது தத்தமது விருப்பு வாக்கை அளிப்பதுடன், சுமந்திரனுக்கும் விருப்பு வாக்குகளைச் சேர்ப்பதே சுயநலத்திட்டமாக இருந்தது.
அதனை சுமந்திரனுடன் இணைந்து ஆறு வேட்பாளாகள் நூறு வீதம் நிறைவேற்றினர். இருவர் அரைகுறையாக அதனைச் செய்தனர்.
அந்த வகையில், சிறீதரனை எப்படியாவது தோல்வியடையச் செய்து, சுமந்திரனை வெற்றியடையச் செய்வதே சுயநல சூழ்ச்சிக் திட்டமாக அமைந்தது. ஆனால், அந்த சூழ்ச்சித் திட்டத்தினை யாழ்.மாவட்ட மக்கள் முறியடித்தனர்.
அதிலும் குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் அச்சூழ்ச்சியினை முறியடித்தனர். அதாவது சுமந்திரனைத் தோல்வியடைச் செய்வதற்காக யாழப்பாண மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியையே இம்முறை பலிக்கடாவாக்கியுள்ளனர்.
இங்கு தென்னிலங்கைக் கட்சியான தேசிய மக்கள் சக்தியை முதலிடத்திற்கு நகர்த்தி இரண்டாவது நிலைக்கு தமிழரசுக்கட்சியைத் தள்ளியுள்ளனர்.
6 – 8 வேட்பாளர்கள் கூட்டாக இணைந்து சுமந்திரனை முன் தள்ள நினைத்தும் அதனை யாழ் மக்கள் முறியடித்து மூக்கை உடைத்துள்ளனர்.
அப்படியென்றால் இது சுமந்திரனினதும் அவரது குழுவினதும் படுதோல்வி என்றே கருத முடியும். இத்தோல்விக்கு முக்கிய காரணம் தரவராசா, திருமதி ரவிராஜ், சரவணபவான், உமாகரன் போன்றவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைக்காமல் வெளியேறத் தூண்டியதும் தமிழரசுக் கட்சியுடன் இணைய விருப்புடன் இருந்த மணிவண்ணன் தவிர்க்கப்பட்டதுமேயாகும்.
மேற்குறிப்பிட்ட நால்வரும் வேட்பு மனுவில் இணைக்கப்பட்டிருந்தால், 3 — 4 ஆசனங்களை யாழ்மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியால் கைப்பற்றி இருக்க முடியும்.
மேலும், வன்னி மாவட்டத்தில் சாள்ஸ் நிமலநாதன், மருத்துவர் சிவமோகன் ஆகியோர் இறக்கப்பட்டிருந்தால் மூன்று ஆனங்களைத் தமிழரசால் கைப்பற்றி இருக்க முடியும்.
அந்த வகையில் மேலுமோர் தேசியப்பட்டியல் என்ற ஆசன ரீதியில் பார்த்தால்,மேலும் ஓராசானத்தைப் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது.
எனவே, மொத்தமாக வடமாகாணத்தில் 5 அல்லது 6 ஆசனங்களைத் தமிழரசுக்கட்சி பெறக்கூடிய நிலை இருந்தது.இதனை சுமந்திரனின் சூழ்ச்சித்திட்டமே இல்லாமல் ஆக்கியது. ஆனால் சிங்கள நெருங்கிய குடும்ப உறவுகளைக் கொண்ட சுமந்திரனின், தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படுத்தி இல்லாமல் செய்தல் என்ற திட்டத்திற்கான செயற்பாடு தொடர்கிறது.
இதற்கு ஏற்றால் போல் தமிழ்த் தேசியவாதிகளான தவராசா, சரவணபவான், திருமதி சசிகலா ரவிராஜ்,உமாகரன், அரியநேத்திரன்,விமலேஸ்வரி போன்றவர்களை அகற்றும் செயற்பாடுகளும் தொடர்கினறன.
தற்போது வடமாகாணத் தேர்தல் தோல்விக்கான காரணரான சுமந்திரனைத் தவிர்த்து விட்டு, அதனை மாவை சேனாதிராசாவின் தலையில் கட்டிவிட்டு, அவரைத் தமிழரசுக்கட்சியில் இருந்து ஒதுக்கும் சூழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழரசின் தலைமையை சுமந்திரனின் அடிவருடியான சிவஞானத்திடம் ஒப்படைக்கவும் கொழும்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதில் சுமந்திரன் தலைமையில் கூடிய சாணக்கியன், சயந்தன், ரட்ணவடிவேல், மட்டு சரவணபவான், சிவஞானம் போன்றவர்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.
எந்த வழியிலாவது சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் தமிழரசைக் கைப்பற்றி அதன் தலைவர் செயலாளர் பதவிகளைப் பிடிப்பதற்கான சூழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.
தமிழ்த்தேசியத்தை நீக்கி சிங்களத் தேசியத்துக்கு ஏற்றால் போல் தமிழரசை வடிவமைக்க சுமந்திரன் சாணக்கியன் போன்ற சிங்களக் கலப்புவாதிகள் திட்டமிட்டு காய் நகர்த்துகின்றனர்.
ஒன்றில் தமிழரசுக்கட்சி, சிங்களத் தேசியத்தின் வாலாட்டியாக அமைய வேண்டும் அல்லது அழிந்துவிட வேண்டும் என்பதே சுமா சாணக்கிய திட்டமாகும்.
தமிழரசை தமிழ்த்தேசியவாதிகள் பாதுகாக்கா விட்டால், அதனை யாராலும் பாதுகாக்க முடியாது.கட்சியை அழிக்க வந்தவர்கள் எந்த வழியிலாவது அகற்றப்பட்டாக வேண்டும். இல்லையேல் சங்கரியின் கையில் மாட்டிய தமிழர் விடுதலை க்கூட்டணியாக தமிழரசும் மாறிவிடும்.
தமிழரசின் கொள்கையை நீக்கிவிட்டு, பணத்தாலும் மதுபானத்தாலும் தமிழரசை வளர்க்க முடியாது. தமிழரசை அழிப்பது தமிழர்களை அழிப்பதற்கு நிகரானது.
SHARE