சுரபி குறும்பட விருது விழா பிரம்மாண்டமாக அரங்கேறியது.

578

குறும்படம் மூலம் வெள்ளித்திரையில் கால் பதிக்கும் வண்ணம் பல முன்னணி குறும்பட விழாக்கள் சென்னையில் நடந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வருடங்களாக சுரபி குறும்பட விழாவுக்கான தேர்வு மற்றும் திரையிடல் சென்னையில் நடைபெற்றது.

இதனையடுத்து இன்று மாலை சுரபி குறும்பட விருது விழா மிக பிரம்மாண்டமான முறையில் சென்னையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 57 பிரிவுக்கான விருதுகளை குறும்பட இயக்குனர்களுக்கு வழங்கியது சுரபி நிறுவனம். இதில் ஈழ குறும்படமான ஏதிலிகள் குறும்படம் பல பிரிவுகளில் விருதினை பெற்றது.

சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குனர்கள் சேரன், சமுத்திரக்கனி மற்றும் பல பிரபலங்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

இவ்விழாவுக்கு சினிஉலகம் ஊடக அனுசரணையில் வழங்கியதில் பெருமை அடைகிறது.

விருதுகள் விபரம்

சிறந்த நடிகர் – தீபக் பரமேஷ் (களம் டெலிபிலிம்)

சிறந்த டெலிபிலிம் – கண்ணீர் அஞ்சலி

சிறந்த டெலிபிலிம் இயக்குனர் – குரு (கண்ணீர் அஞ்சலி)

சிறந்த ஒளிப்பதிப்பாளர் – குகன் பழனி (கண்ணீர் அஞ்சலி)

சிறந்த துணைநடிகர் – சரத் (கண்ணீர் அஞ்சலி)

சிறந்த இயக்குனர் – சரத் ஜோதி (காத்தாடி வாங்கிய பெண்)

சிறந்த இசையமைப்பாளர் – சுவாமிநாதன் (பனி விழும் மலர் வனம்)

சிறந்த பிரபல குறும்படம் – கி.மு2014

சிறந்த ஒளிப்பதிவாளர் – தமிழ் அழகன் (தி கேம்)

சிறந்த பாடலாசிரியர் – நீலேஷ் கிருஷ்ணா (ஏன் மகனா-பனி விழும் மலர்வனம் குறும்படம்

சிறந்த நடிகர் – ராசு (ஆகாசவானி குறும்படம்)

சிறந்த நடன இயக்குனர் – ரேஷ்மன் (பனி விழும் மலர்வனம்)

சிறந்த கதை – மாற்றம்

சிறந்த பிரபல நடிகர் – விக்னேஷ்குமார் (பேஸ்புக் நீங்கள் நல்லவரா கெட்டவரா)

சிறந்த ஆக்சன் குறும்படம் – சூது விரும்பேல்

சிறந்த காமெடி நடிகர் – அசார் (காயத்ரி அண்ட் பேமிலி)

சிறந்த புதுமை பாடல் – பேண்டமைன்

சிறந்த பாடல் – டிரிம் ஆப் லைப் (Dream of Life)

சிறந்த சமூகவிழிப்புணர்வு குறும்படம் – அறம்

சிறந்த விசுவல் எபெக்ட்ஸ் குறும்படம் – Petrified

சிறந்த ஆல்ரவுண்டர் குறும்படம் – Petrified

நாளை முழு விருதுகள் விபரம் வெளியாகும்

SHARE