குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் இருந்து மக்களின் வாழ்க்கை மீண்டும் யாதார்தத்தை அடைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முழு நாடும் பயங்கரவாதத்துக்கு அடிமையாக நேரிடும். மேலும் ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதமாகும் போது சுற்றுலாதுறை வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,
குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே நாட்டின் வேலைத்திட்டங்களை முறையாக முன்னெடுப்பதற்காக தொடர்புப்பட்ட அனைத்து பிரிவினருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான அனைத்து நாடுகளும் புலனாய்வுத்துறையினரின் தகவல்களை பகிர்ந்துக்கொள்வதும் அவசியமாகும். அவ்வாறு தகவல்களை பகிர்ந்துக்கொள்வதினூடாகவே உலகத்திலிருந்து முழுமையாக பயங்கரவாத்தை இல்லாதொழிக்க முடியும் என்றார்.