எஸ்.எம்.முபீன், அபு அலா
கடந்த சில நாட்களாக திருகோணமலை மாவட்டத்தில் தொடராக பெய்து வந்த அடைமழை காரணமாக நிலாவளி கடற்கரையோரங்களில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இளைப்பாறும் இடங்கள் சேதமடைந்து காணப்பட்டன. இதனை மாற்றியமைக்கும் “கிளீன் சிறிலங்கா” பணிகள் மற்றும் கடற்கரை ஓரங்களை துப்பரவு செய்யும் சிரமதானம் இன்று (25) முன்னெடுக்கப்பட்டது.
வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக விரும்பி வருகின்ற இடமாக திருகோணமலை – நிலாவெளி பிரதேசம் காணப்படுகின்றன. கடந்த வருடங்களை விட இவ்வருடம் மிக அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதை எதிர்பார்த்து அவர்களின் வசதிகளுக்கேற்ப குறித்த பிரதேசங்களிலுள்ள இளைப்பாறும் கட்டில்கள், கதிரைகள் மற்றும் கூடாரங்கள் போன்றவற்றை அழகு படுத்தும் பணிகளுடன் கடற்கரையோரங்களை சுத்தமான பிரதேசமாக வைத்திருக்கும் சிரமதானப் பணிகளை நிலாவெளி சுற்றுலாப் படகு சங்கத்தினால் முன்னொடுக்கப்பட்டது.
சுற்றுலாப் படகு சங்கத்தின் தலைவர் அழகைய்யா கோபாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற இப்பணியில் சங்கத்தின் உபதலைவர் எஸ்.எம்.முபீன் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது