சூப்பர் சார்ஜிங் வசதியுடன் புதிய Hyundai எலக்ட்ரிக் கார்., அசத்தலான அம்சங்கள் சிறப்பு..!

122

 

சூப்பர் சார்ஜிங் வசதியுடன் விரைவில் சந்தைக்கு வரவுள்ள புதிய Hyundai Ioniq 5N எலக்ட்ரிக் கார் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.

EV வாகனங்கள் தற்போது உலகம் முழுவதும் நடைமுறையில் இருப்பதால், அனைத்து நிறுவனங்களும் தங்கள் EV கார் மொடல்களை அறிமுகப்படுத்துகின்றன.

சமீபத்தில், முன்னணி கார் நிறுவனமான Hyundai அதன் புதிய Ioniq 5N எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது.

இந்த கார் வெறும் 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்யும் திறனுடன் வருகிறது. மேலும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள 84kWh பேட்டரி அமைப்பு EV பிரியர்களை நிச்சயம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai Ioniq 5N காரைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்ப்போம்..
ஹூண்டாய் Ioniq 5N இரட்டை மோட்டார் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நேர்த்தியான கார் 478KW-ன் அற்புதமான ஆற்றல் வெளியீட்டை வழங்குகிறது. 8-ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Ioniq 5N swift acceleration-ஐ கொண்டுள்ளது. குறிப்பாக, 0 முதல் 60 கிமீ வேகத்தை 3.25 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு மற்றும் கவர்ச்சிகரமான முன்பக்கக் காட்சியுடன் அனைவரையும் ஈர்க்கிறது.

உட்புற அமைப்பைப் பொறுத்தவரை, ஹூண்டாய் ஐயோனிக் 5N, USB C போர்ட், வயர்லெஸ் சார்ஜிங், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட், டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் வருகிறது.

ஹூண்டாய் Ioniq 5N காரை 50KW சார்ஜரைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 631 கிமீ வரை செல்லும். 584 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. லாங் டிரைவ்களுக்கு இந்த கார் சரியான தேர்வாக இருக்கும் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்.

கார் ஒற்றை வேரியண்டில் வருகிறது, ஆனால் மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வருகிறது.

மேலும் இந்த கார் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. 72.6kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் இந்த கார் வால்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் Kia EV6 உடன் போட்டியிடுகிறது.

இருப்பினும், இந்த காரின் வெளியீட்டு திகதி மற்றும் டெலிவரி விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், இந்த காரின் விலையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

SHARE