சூயிங்கம் மெல்வது தவறானதா?

413

சூயிங்கம் மெல்லும் பழக்கம் இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால், இந்த சூயிங்கம் மெல்வது தவறானதா? என்ற கேள்வி பலபேரிடம் நிலவி வருகிறது.

ஆனால் இதில் தவறு ஒன்றுமில்லை, சில ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. செரிமானத்துக்கும் உணவுத்துகள்களை அகற்றவும் உதவும் உமிழ்நீர் சுரப்பை சூயிங்கம் தூண்டுகிறது.

நம் தாடையின் தசைகளுக்குப் பயிற்சியாகவும் முகத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கும் தண்ணீர் குறைவாக அருந்துகிறவர்களுக்கும் வாய்ப் பகுதி வறட்சியாக இருக்கும்.

அவர்களுக்கு வறட்சியைப் போக்க சூயிங்கம் பயன்படும். இப்போது சொத்தை வராமல் இருப்பதற்கான சூயிங்கம்மை பல் மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.

ஆனால், எதுவும் அளவு கடந்தால் ஆபத்து என்பது போல் ஒரு நாளுக்கு ஒன்றிரண்டுக்கு மேல் சூயிங்கம் மென்றுகொண்டே இருப்பவர்களுக்கு TMJ என்கிற டெம்ப்ரோ மேண்டிபுலர் ஜாயின்ட்டில்(Temporomandibular joint) கண்டிப்பாகப் பிரச்சனை ஏற்படும்.

நம்முடைய மேல் வாயையும் கீழ் தாடையையும் இணைக்கும் இந்த டி.எம்.ஜே. எலும்பு தேய்ந்து நாளடைவில் தாடை வலி ஏற்படுவதுடன் வாயை மூடுவதே சிரமம் ஆகிவிடலாம்.  சூயிங்கம் பழக்கம் உள்ளவர்களுக்கு பசியின்மை ஏற்படும் வாய்ப்பும் உண்டு.

மேலும் நாம் மற்றவர்களிடம் பேசும் போது, சூயிங்கம் மென்றால் அது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும், எனவே இந்த மாதிரியான சூழ்நிலைகளில் சூயிங்கத்தை தவிர்ப்பது நல்லது

SHARE