அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோள்கள் பற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.
இந்த ஆய்வு மையத்தில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அமெரிக்க விண்வெளி மையமான நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
அவ்வகையில், கடந்த சனிக்கிழமை ஆறு பேர் அடங்கிய குழு, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வினாடிக்கு 5 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த சூரியனை படம் பிடித்தது.
அதில் ஒரு புகைப்படத்தில் சூரியனை விமானம் ஒன்று கடப்பது போல பதிவாகியுள்ளது.
சரியான தருணத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், சூரியனைக் கடப்பது பறவையா, இல்லை ஏதாவது விமானமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை நம்பாத ஒரு சிலரோ இது போட்டோ சாப் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கு முன் இதுபோன்ற பல்வேறு அபூர்வ நிகழ்வுகளை சர்வதேச விண்வெளி மையம் படம் பிடித்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.