சூரியனை போன்ற நட்சத்திரக் கூட்டம் கண்டுபிடிப்பு

179

சூரிய குடும்பத்தை போன்றதொரு நட்சத்திரக் கூட்டத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே இச்சாதனையை படைத்துள்ளனர்.

இவர்கள், விண்வெளியில் சூரிய குடும்பத்தை சேர்ந்த 816 நட்சத்திரங்களை கொண்ட குடும்பத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

ஏறத்தாழ 50 லட்சம் ஆண்டுகளாக பார்வைக்கு தென்படாமல் இருந்ததாகவும், இதில் பெரும்பாலனவை உயிர் வாழ தகுந்த சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

2010ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்களை கொண்டு ஆய்வு நடத்தியதில் குறித்த நட்சத்திர கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

SHARE