சூரியன் மூலம் வரப்போகும் பேராபத்து! உஷார் ரிப்போர்ட்

248

625-500-560-350-160-300-053-800-748-160-70-7

சூரியன் என்பது பூமிக்கு மிக அருகிலுள்ள விண்மீன் ஆகும். இது பிளாஸ்மா நிலையில் உள்ள மிகவும் வெப்பமான வாயுக்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கோளமாகவும் காணப்படுகிறது.

இந்த சூரியனில் ஏற்ப்பட போகும் சில முக்கிய விடயங்களை பற்றி விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது சூரியனானது இப்போதிருக்கும் அளவை விட ஐந்து பில்லியன் வருடங்களுக்கு பிறகு 100 மடங்கு பெரிதாகி சிவப்பு ராட்சசனாக காட்சியளிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், பூமிக்கு மிக பெரிய பேரழிவு ஆபத்துக்கள் வருங்காலத்தில் வரும் என கூறியுள்ள அவர்கள் இத்தகைய பயங்கர மாற்றங்களால் சூரியனானது உயிர்களை சுட்டு பொசுக்கும் அளவிற்கு வெப்பத்தை உமிழும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

சூரியனை சுற்றி பல கிரகங்கள் இருந்தாலும் அதன் அருகாமையில் இருக்கும் புதன் மற்றும் வெள்ளியை சூரியன் விழுங்கும் ஆபத்தும் ஏற்ப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

SHARE