விண்வெளிப்பய ணம் மேற்கொண்ட விஞ்ஞானிகளால் கொண்டுவரப்பட்ட நிலவுப்பொருள் மாதிரிகள் ஆராயப்பட்டன. அப்போது நிலவின் தரையிலிருந்த மிகப்பழைய பொருளும், சூரிய மண்டலமும் கிட்டத்தட்ட ஒரே வயது உடையவை (5 பில்லியன் ஆண்டுகள்) எனத் தெரிய வந்தது. புவியில் மண், பாறை போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதிக மாறுதல்களுக்கு உள்ளாகியிருக்கும். ஆகவே, நிலவுப் பயணம் வாயிலாக சூரிய மண்டலத்தின் மிகப்பழமையான வரலாறையும் அறிய வாய்ப்பிருக்கிறது.
நிலவின் தரையை மிக நுணுக்கமாக அறிவதும் இதில் முக்கியமானது. தெளிவான, அகச்சிவப்பு, குறைந்த ஆற்றல் – அதிக ஆற்றல் எக்ஸ்ரே படங்களை உயர் தரத்தில் விண்கலங்கள் மூலமாகப் பெற முடியும். இடம் பற்றிய விவரமான வர்ணனையைப் பெறுவதோடு, விண்கலத்திலுள்ள கருவிகள் அங்குள்ள தாது வளம் பற்றியும், வேதிப்பொருட்கள் பற்றியும் ஆராயும். எதிர்காலத்தில் உலகின் ஆற்றல் தேவைக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஹீலியம் 3 போன்ற ஆற்றல் மூலங்கள் பற்றியும் அறியப்படும். நிலவின் தரையை மிக நுணுக்கமாக அறிவதும் இதில் முக்கியமானது.
தெளிவான, அகச்சிவப்பு, குறைந்த ஆற்றல் – அதிக ஆற்றல் எக்ஸ்ரே படங்களை உயர் தரத்தில் விண்கலங்கள் மூலமாகப் பெற முடியும். இடம் பற்றிய விவரமான வர்ணனையைப் பெறுவதோடு, விண்கலத்திலுள்ள கருவிகள் அங்குள்ள தாது வளம் பற்றியும், வேதிப்பொருட்கள் பற்றியும் ஆராயும். எதிர்காலத்தில் உலகின் ஆற்றல் தேவைக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஹீலியம் 3 போன்ற ஆற்றல் மூலங்கள் பற்றியும் அறியப்படும்.
‘அப்சலூட் ஜீரோ’ என்றால் என்ன?
அப்சலூட் ஜீரோ என்ற ‘தனிச்சுழி’யானது வெப்பக் கீழ்வரம்பை குறிக்கவே பயன்படுகிறது. மைனஸ் 273.15 டிகிரி செல்சியஸ் அல்லது மைனஸ் 459 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தையே அப்சலூட் ஜீரோ என்கிறோம். கெல்வின் ஸ்கேலில் இது 0 என்றே குறிக்கப்படுகிறது. இதுவே சாத்தியமாகக்கூடிய மிகமிகக் குளிர்நிலை. இந்நிலையில் அணுக்களும் மூலக்கூறுகளும் முற்றிலுமாக நகர்வதை நிறுத்திவிடும். ஆமாம்… எப்படி இருக்கும் இந்த குளிர் என யோசித்துப் பாருங்களேன்!
நட்சத்திரங்கள் எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?
மிக பிரமாண்டமான, பிரகாசமான நட்சத்திரங்கள் குறைவான காலமே வாழும். குறைவாக என்றாலும் 10 மில்லியன் ஆண்டுகள்! சூரியனைப் போன்ற நடுத்தர அளவு நட்சத்திரங்கள் 10 பில்லியன் ஆண்டுகள் கடந்தும் வாழும். சிறிய நட்சத்திரங்களுக்கோ வாழ்க்கை பற்றிய பயமே இல்லை!