கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை ஜோதிகா. இவர்களுக்கு தியா எனும் ஒரு மகளும், தேவ் எனும் ஒரு மகனும் உள்ளனர். ஜோதிகா தனது பிள்ளைகளுடன் மும்பையில் தற்போது செட்டிலாகியுள்ளார்.
ஆனால் சூர்யா சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வப்போது சூர்யா மும்பைக்கு சென்று வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷாக்கிங் தகவல்இந்நிலையில், சூர்யாவை ஜோதிகா விவாகரத்துசெய்யப்போவதாக திடீரென ஷாக்கிங் தகவல் உலா வருகிறது. படங்களில் நடிப்பது தொடர்பாக சூர்யா, ஜோதிகாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் விவாகரத்து முடிவுக்கு வந்ததாகும் கூறப்படுகிறது.
இதனால் தான் தனது பிள்ளைகளுடன் மும்பைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் ஜோதிகா என தகவல் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஜோதிகா பேசியுள்ளார்.
ஜோதிகா பேச்சு
இதில் “நான் இந்தி படங்களில் பிசியாகி நடித்து வருவதால் தான் மும்பைக்கு வந்துவிட்டேன். மேலும் என் பிள்ளைகள் மும்பையில் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள், மேலும் நன்றாக படித்து வருகிறார்கள்” என கூறினாராம்.
நான் மும்பையிலும் பிள்ளைகள் சென்னையிலும் இருந்தால் அவர்களுடைய படிப்புக்கு அது சரிப்பட்டு வராது என்பதற்காக தான் அவர்களையும் தன்னுடைய அழைத்து சென்றுவிட்டாராம். ஹிந்தி படங்களின் கமிட்மென்டன்ஸ் முடிந்த பின் ஜோதிகா சென்னைக்கு வந்துவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்த விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.