சூர்யா படத்தில் ஊதா கலரு ரிப்பன் நடிகை!

618

தற்போது அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது நமக்கு தெரியும்.

இந்தப் படத்தில்தான் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். இதில் இரண்டு நாயகி மட்டும் கிடையாதாம். இப்போது மூன்றாவதாக ஒரு நாயகியும் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, மூன்றாவது நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவிருக்கிறாராம். இதற்காக ஸ்ரீதிவ்யாவுக்கு ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

தற்போது தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் பென்சில், சிவகார்த்திகேயனுடன் டாணா, விஷ்ணுவுடன் ஜீவா, அதர்வாவுடன் ஈட்டி, விதார்த்துடன் காட்டு மல்லி, புதுமுக நடிகருடன் நகர்ப்புறம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ரஜினி மற்றும் மணிரத்னம் படங்களில் நடிப்பது ஒன்றுதான் ஒரே லட்சியம் என்றும் ஸ்ரீதிவ்யா கூறுகிறார். பொதுவாக, ஒரு நடிகையை சமாளிப்பதே கடினம். ஆனால் இங்க வெங்கட் பிரபு எப்படிதான் மூன்று நாயகிகளை சமாளிக்கப் போகிறாராம்.

SHARE