செத்துக்கொண்டிருக்கும் தமிழ்தேசியம், விற்றுப்பிழைக்கும் அரசியல்வாதிகள்!

360

பட்டுவேட்டி பற்றிய கனவில் இருத்தபோது கட்டியிருந்த கோவணமும் காணாமல் போனது” என்ற வைரமுத்துவின் வரிகளுக்கான உதாரணமாக தமிழர் தாயகத்தின் இன்றைய நிலை காணப்படுகின்றது.


ஆம், தமிழ் தேசியம் என்ற உயிரோட்டமான உன்னத வாழ்வியல் கோட்பாடு ஈழத்தமிழர்களால் வலிந்து வடிவம் கொடுக்கப்பட்டதல்ல. பேரினவாதத்தின் திணிப்பாகவும், “தக்கன பிழைக்கும் தகாதன அழியும் ” என்ற உயிரினக்கோட்பாட்டின் தத்துவாத்த தாக்கமுமே தமிழர் தாயகத்தில் உலகம் வியந்து நோக்கிய மாபெரும் விடுதலைச் சமர் நிகழ்வதற்கு கால்கோளானது. ஒரு சுதந்திர தேசத்துக்கான  சுயநிர்ணயத்தின் நியாயமான அனைத்து தேவைப்பாடுகளையும்,   பல்துறைக் கட்டுமா னங்களையும்  கொண்டிருந்த தமிழர்களின் சுதந்திரப்போராட்டம் இந்த பூமிப்பந்தில் இன்னுமோர் இறையாண்மை கொண்ட ஓர் தேசத்தின் பிறப்புக்கான கால எல்லையை நெருங்கியிருந்தது. இந்த நிலையில்தான் ராஜிவ்காந்தியின் படுகொலை, அமெரிக்க இரட்டைக்கோபுர தகர்ப்பு போன்ற நிகழ்வுகள் எம்மவரின் விடுதலைப் பயணத்தில் இடறல்களை ஏற்படுத்த தொடங்கியது. இந்த சூழ்நிலையில்தான் மேதகு தலைவர் அவர்களால் வலுவான மரபுவழி இராணுவ கட்டமைப்பு காணப்பட்ட நிலையிலும் சமகாலத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தர்மம், சிங்களப்பேரினவாதத்தின் தவறான பரப்புரைகள்  என்பவை தொடர்பில் ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வதற்கும், சர்வதேச நாடுகளை ராஜதந்திர ரீதியாக அணுகுதல், ஆதரவு நிலையினை உருவாக்குதல் போன்ற பன்முக தேவைகளுக்காகவும் தலைவர் அவர்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டு மாபெரும் வரலாற்றுக்கடமை கட்சிசார்ந்தவர்களிடம் பொறுப்பகப்படுத்தப்பட்டது.
2009ம் ஆண்டுடன் தமிழர்களின் இராணுவ வல்லமை உறங்கு நிலை சென்ற பின்னர் தமிழ் தேதிய கூட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளும் துரோகத்தின் பாதையில் இன்றுவரை பயணிக்கின்றது. தமிழர்களின் வீரம், எல்லையற்ற ஈகம், இழப்புக்கள், அவலங்கள், கண்ணீர் என்பவற்றின் கலவையாக 2009ம் ஆண்டுவரை நகர்த்தப்பட்ட தமிழர்களின் போராட்ட வரலாறு வெள்ளை வேட்டி கட்ட உங்களால் விற்றுப்பிளைக்கும் அவலம் மக்களின் மனங்களை ஒரு கொதிநிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த கருத்துப்பதிவுக்குரிய நான் தமிழ் உணர்வை சுவாசித்து வாழும் வீரம் விளைநிலம் மட்டு மண்ணின் மைந்தன். இதுவரை நிபந்தனை இல்லாமல் தமிழ் தேதிய கூப்டமை ஆதரித்த ஆயிரம்மாயிரம் உணர்வாளர்களுள் ஒருத்தன். அடுத்த தேர்தல் வந்ததும் தமிழர்களை விற்றுவிழுங்கி ஏப்பம் விட காத்திருக்கும் உங்களுக்கு சாவு மணியடிக்க தயாராகும் வாக்குப் புள்ளடிகளில் ஒன்று.
உங்களின் துரோகத்தின் பட்டியலைப் பதிவிடுகிறேன் படியுண்கள்.

1, தமிழர்களின் போராட்ட தர்மத்தின் நியாயங்களை சர்வதேசத்தின் கண்களில் காட்டத்தவறியமை.
2: முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்து நிறுத்த தவறியமையும், கண்டுகொள்ளாமையும்
3: இணைந்த வடகிழக்கு  மாகாணங்கள் வஞ்சகமாக பிரிக்கப்பட்டபோது தடுத்து நிறுத்தாமையும், மீழ் இணைப்புக்கு முனைப்புக்காட்டாமையும்.
4: கிழக்கு மாகாண சபையினை இஸ்லாமியர்களுக்கு தாரைவார்ய்துக் கொடுத்தமை(விற்றுப்பிளைத்தமை)
5: சம்பூர் மக்களின் காணி மீட்பு தொடர்பில் தலைமையின் அசமந்தம்.
6:முன்னாள் போராளிகளின் நலன்கள் தொடர்பில் அக்கறைகாட்டாமையும், ஜனநாயகப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று விழித்து கூறியமையும்.
7: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நியாயத்தை பெற்றுக்கொடுக்க உழைக்காமை.
8: ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை விடுவிப்பது தொடர்பில் ஆக்க பூர்வ செயற்பாடுகளை முன்னெடுக்காமை.
9: போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், விசேட தேவைப்பாடுடையவர்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பில் சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுட்கொடுக்க தவறியமை.

10: ஸ்ரீ லங்காவின் தேசியக் கொடியை ஏற்றுக்கொண்டதன் மூலம் தமிழ் தேசியத்தின் வாழ்வுக்கு சாவு மணியடித்தமை.

11: கிழக்கு மாகாணத்தில் திறமையற்ற, ஆளுமையற்றவர்களுக்கு கட்சிக்குள் இடமளித்து மக்கள் மத்தியில் அரசியல் மந்த நிலையினை உருவாக்கியமை.
12: வடமாகாண சபையின் உட்பூசல் நிலையினை தலைமை சாணக்கிய நகர்வுகளால் சமரசத்தை ஏற்படுத்தாமை.

13: 30 வருட போரால் சிதைந்து கிடக்கும் தமிழர் தாயகத்தின் அபிவிருத்திக்கு சர்வதேசத்தின் உதவிகளைப்ழெற்றுக்கொடுக்காமை.
14: ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுக்கு காலநீடிப்பு வழங்கி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகமிழைத்தமை.

15: கட்சிக்குள் ஒழுக்க விழுமியங்களை கட்டியெளுப்பாமையும், தமிழர்களின் பண்பாட்டுக் கோலங்களுக்கு களங்கம் ஏற்படுத்தியமையும்

இவ்வாறு உங்களுக்கெதிரான துரோகத்தின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. எதிர்வரும் காலண்களில் வரப்போகும் தேர்தல்களுக்கு வாக்கு கேட்பதற்காக உங்களிடம் இருக்கும் உங்களின் சாதனைகளையும், மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும் பட்டியல்படுத்தி இந்த பதிவுக்கான பதிலை முடிந்தால் தாருங்கள். எதிர்காலம் உங்களுக்கு தோலுரித்து துகிலுரிவதற்கான காலத்தின் வரவுக்காக காத்திருக்கிறது.

SHARE