சென்சேஷனல் ஹிட்டான மஞ்சும்மேல் பாய்ஸ்.. தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா

89

 

சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த வெளிவந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தென்னிந்திய அளவில் மலையாள படங்கள் வசூலை தாண்டி, விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவிக்கின்றன.

மஞ்சும்மேல் பாய்ஸ்
அப்படி அண்மையில் வெளிவந்த பிரமயுகம், பிரேமலு மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் மாபெரும் அளவில் ஹிட்டாகியுள்ளது. இதில் இளைஞர்களை பெருமளவு கவர்ந்த திரைப்படம் தான் மஞ்சும்மேல் பாய்ஸ்.

இப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழகத்தில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வார இறுதியில் மட்டுமின்றி, ஒர்க்கிங் நாட்களிலும் மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வசூல் விவரம்
இந்நிலையில், சென்சேஷனல் ஹிட்டாகியுள்ள மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ஒரு மலையாள திரைப்படம் கேரளாவை தாண்டி தமிழகத்தில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது மாபெரும் விஷயம் தான்.

 

SHARE