செப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர்பிலான விசாரணை சி.ரி.ஐ.டி.யிடம் கையளிப்பு

239

சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் யூசுப் இல்ஹாம் அஹமட்டுக்கு சொந்தமான குண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் சேவையாற்றிய ஊழியர்கள் 8 பேர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அந்த விசாரணைகள் வெல்லம்பிட்டி பொலிஸாரிடமிருந்து இவ்வாரு சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனயவுப் பிரிவினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை, பிணையில் உள்ள குறித்த சந்தேக நபர்களை நாளை  மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE