ரஷியா ‘ஏ.எம்.4 பி’ என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கை கோளை ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தியது. கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து அந்த ராக்கெட் புறப்பட்டது.
அது புறப்பட்ட 545 வினாடிகளில் நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் கரும்புகையுடன் தீப்பிழம்பாக எரிந்து மீண்டும் பூமியில் வந்து விழுந்தது.
இக்காட்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பானது. இந்த செயற்கைகோள் ரூ.175 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. ராக்கெட்டின் புரோடான் கட்டுப்பாட்டு என்ஜினில் ஏற்பட்ட கோளாறே இச்சம்பவத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.