செயற்கை கருமுட்டை! இனி பெண்களே தேவையில்லை! மாபெரும் கண்டுபிடிப்பு

486

இன்றைய பரபரப்பான உலகில் நாளுக்கு நாள் ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்புகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

அறிவியல், விஞ்ஞான ரீதியாக உச்சத்தை அடைந்தாலும் மனிதர்களுக்கு தீமையையும் ஏற்படுத்தவே செய்கின்றன.

அந்த வகையில் Genetic Science என்னும் துறை அபார வளர்ச்சி கண்டுவருகிறது, சமீபத்தில் செயற்கையான கருமுட்டையை உருவாக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் ஐரோப்பாவின் பாத் பல்கலைகழக விஞ்ஞானிகள்.

இதுமட்டும் வெற்றிகரமாக செயல்பட்டால் எதிர்காலத்தில் பெண்களின் துணை இல்லாமலேயே குழந்தையை உருவாக்க முடியும்.

இந்த செயற்கை கருமுட்டை இயற்கையான கருமுட்டை போன்றே செயல்படும் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இதனை கொண்டு எலிக்குஞ்சு ஒன்றையும் உருவாக்கியுள்ளனர், தற்போது மற்ற எலிகளைப் போன்று இந்த எலியும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விஞ்ஞானி டாக்டர் பெர்ரி கூறுகையில், சோதனை நிலையில் உள்ள இந்த முறை வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் இரு ஆண்களின் அணுவை கொண்டே குழந்தையை சோதனைக் குழாய் முறையில் வளர்க்கலாம்.

பெண்களின் துணை இல்லாமலேயே, ஒரே ஆணின் ஒற்றை செல் மற்றும் விந்தணுவை எடுத்தும் கரு உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் ஐரோப்பாவின் ‘Journal Nature’ என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

SHARE