செயற்கை மூட்டினை உருவாக்கி சாதித்த விஞ்ஞானிகள்

420
அமெரிக்காவிலுள்ள Massachusetts பொது வைத்தியசாலை ஆராய்ச்சியாளர்கள் செயற்கையான முறையில் மூட்டினை ஆய்வு கூடத்தில் உருவாக்கியுள்ளனர். சோதனை முயற்சியாக எலியின் மூட்டினை பயன்படுத்திய அவர்கள் தற்போது வெற்றிகரமாக அதனை ஆய்வுகூடத்தில் வளர்த்து வருகின்றனர்.இதன் மூலம் மனிதர்களிலும் மூட்டுக்களை மாற்றம் செய்ய முடியும் என அவர்கள் நம்புகின்றனர். இதற்கு முன்னர் தசைகள், நரம்புகள் என்பன செயற்கை முறையில் ஆய்வுகூடத்தில் வளர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செயற்சை மூட்டு உருவாக்கமானது மருத்துவ உலகில் புதிய திருப்பமாக கருதப்படுகின்றது.

இதேவேளை தசைகள், என்புகள், குருத்தெலும்பு தசை நாண்கள், குருதி நாளங்கள் என்பவற்றின் தொகுப்பான மூட்டினை செயற்கை முறையில் உருவாக்கியமை பெரிய வெற்றி என குறித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE