செவ்வாயில் பிறந்த நாளைக் கொண்டாடும் கியூரியோசிட்டி விண்கலம்

276

curiosity

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலம் நாசாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவ் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது.

இதனால் இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தோடு செவ்வாயில் கியூரியோசிட்டி விண்கலம் தரயிறங்கி நான்கு ஆண்டுகள் ஆகப்போகின்றன.

ஆனால் செவ்வாயில் இருந்து பார்க்கும்போது இரண்டு ஆண்டுகள் தான் ஆகப்போகின்றது.

இதற்கு காரணம் செவ்வாயின் சுழற்சிக்கு எடுக்கும் காலமானது எமது பூமியின் சுழற்சிக்கு எடுக்கும் காலத்திலும் அண்ணளவாக இரண்டு மடங்காகும். அதாவது 687 நாட்களாகும்.

இந்த விண்கலமானது செவ்வாயிலிருந்து செல்ஃபிக்கள் உட்பட பல புகைப்படங்களை ஆதாரமாக பூமிக்கு அனுப்பியிருந்தது.

எனினும் முதன் முறையாக தனது நான்காவது பிறந்த நாளில் செவ்வாயின் காலநிலை அறிக்கையையும் வழங்கியுள்ளது.

இதன்படி பகல் நேரங்களில் வெப்பநிலை சராசரியாக 15.9 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேரங்களில் -100 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கின்றது.

SHARE