செவ்வாய் கிரகத்திலும் பிரமீடுகள் உள்ளன: ஆதாரத்துடன் கூறும் வேற்றுகிரக ஆர்வலர்கள் (வீடியோ இணைப்பு)

433
பண்டைய எகிப்திய நினைவுச் சின்னங்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்திலும் உள்ளதாக வேற்றுகிரக ஆர்வலர்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காக க்யூரியாசிட்டி என்ற ரோபோ அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ரோபோ அனுப்பும் செவ்வாய்கிரகம் தொடர்பான புகைப்படங்களை நாசாவும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த புகைப்படங்களை எல்லாம் ஆராய்ந்து வரும் ஜோ ஒயிட் என்ற வானியலாளர் செவ்வாய் கிரகத்தில் பண்டைய கிரேக்க நினைவுச் சின்னங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பூமியில் உள்ளது போன்றே செவ்வாய் கிரகத்திலு ஸ்பின்ஸ் சிற்பம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, நாசா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்தபோது ஒரு புகைப்படத்தில் மனித தலை வடிவத்தில் சிற்பம் இருப்பதை கண்டேன்.

இது ஸ்பின்ஸ் சிற்பத்தை போன்ற ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

நாசா வெளியிட்ட புகைப்படத்தை நான் சோதித்து பார்த்தபோது மலைத்து போய்விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

SHARE