செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்

390
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட ரோவர் விண்கலமானது நீண்ட காலமாக செவ்வாய்க் கிரகத்தினை ஆய்வு செய்து வருகின்றது.இவ் விண்கலமானது செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்களை கண்டறிவதற்கான நோக்கத்தில் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அங்கு உயிரினங்கள் உண்டு என்பதற்கான ஆதாரங்களை அனுப்பியுள்ளது.

அதாவது ரோவர் விண்கலம் விசேட சாதனத்தின் மூலம் செவ்வாயில் மீத்தேன் வாயு இருக்கும் இடம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளது.

இதன் அடிப்படையில் அங்குள்ள மீத்தேன் வாயு தொடர்பான ஆராய்ச்சியினை தொடர்ந்து மேற்கொள்வதற்காக 2020ம் ஆண்டளவில் மற்றுமொரு திட்டத்தை நாசா நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதேவேளை 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் செவ்வாயில் நீர் இருந்திருக்கலாம் என்பதுடன், சல்பர், நைட்ரஜன், ஹைட்ரஜன், பொஸ்பரஸ் மற்றும் கார்பன் போன்றவற்றினால் ஆன இரசாயனச் சேர்வைகளும் காணப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

SHARE