பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம்.செவ்வாய் கிரகம் நமது பூமி கிரகத்தைப் போன்றதாகும். இது நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவும் ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் களம் இறக்கி உள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது.இந்த விண்கலம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ந்தேதி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியது.2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ந்தேதியில் இருந்து புகைப்படம் எடுத்து அனுப்ப தொடங்கியது.செவ்வாய் கிரகத்தில் பல்வேறு படங்களை அனுப்பி உள்ளது.
தற்போது விஞ்ஞானிகள் எதிர்பாராத வகையில் முதன் முறையாக மலைக் குன்று ஒன்றினையும், அங்கு சிதைவடைந்திருக்கும் பாறைகளையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த செப்டம்பர் 8ம் தேதி மலைக் குன்றின் அடிவாரத்தில் இருந்து இப்புகைப்படங்ளை ரோவர் விண்கலம் எடுத்துள்ளது. இக் குன்றுகள் செவ்வாய் கிரகத்தின் தென்மேற்கு பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவை 2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். எவ்வாறெனினும் இப்பாறைகள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்கும்போது காலநிலை மாற்றங்கள் உட்பட மண் அரிப்பும் காரணமாக இருக்கலாம் என ஊகம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு மண் அரிப்பு ஏற்படுவதற்கு நீர் முக்கிய காரணமாக இருந்துக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
– See more at: http://www.manithan.com/news/20160913121555#sthash.xiTeIfhg.dpuf