சேப்பாக்கத்தில் துள் கிளப்பிய CSK! 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி

981

 

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடந்த ஐபிஎல் 2024 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சென்னை பேட்டிங்
நாணய சுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணிக்கு தொடக்கம் சற்று ஏமாற்றமாக இருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியாக களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே, 12 ஓட்டங்களிலேயே அவுட் ஆனார்.

டேவிட் மிட்செல் (52 ஒட்டங்கள்) மற்றும் ஷிவம் துபே (39 ஒட்டங்கள்) ஆகியோருடன் இணைந்து ருதுராஜ் (98 ஒட்டங்கள்) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ருதுராஜ் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் விளாசி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். * தோனி (5) ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

இதன் மூலம் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத் அணியின் பேட்டிங்
213 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே பின்னடைவாக அமைந்தது. தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் (13 ஒட்டங்கள்) மற்றும் அபிஷேக் ஷர்மா (15 ஒட்டங்கள்) எடுத்து ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.

18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் அணி, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சென்னை அணி பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி தாக்குதலின் முன்னணியில் இருந்தார்.

பத்திரனா மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

SHARE