சேலைன் ஏற்றி ஏற்றி ஓமந்தையில் தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும் வரையிலான உண்னாவிரதம்

446

சேலைன் ஏற்றி ஏற்றி ஓமந்தையில் தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும் வரையிலான  உண்னாவிரதம்

l

வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தை­யி­ல் அமைக்குமாறு வலி­யு­றுத்தி தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்.

நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு ஓமந்தை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப அலுவலகத்திற்கு முன்னாள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஓமந்தை பிரதேச வாசியான தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்வரன் ஆரம்பித்தார்.

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் தொடர்கின்றது. இவ் உண்ணாவிரத்திதை கைவிடுமாறு பலராலும் கேட்கப்பட்டும் அவர் முடிவில் மாற்றம் இது வரை எடுக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசத்தி ஆனந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முதலமைச்சரின் செயலாளர் விஜயலட்சுமி, மாகாணசபை உறுப்பினர் இந்திரராஜா லிங்கநாதன், சுகாதார அமைச்சரின்செயலாளர் சத்தியசீலன், பொருளியல் துறை ஆசிரியர் சுதாகரன் இளைஞர் அணி சிவதர்சன், ஊர் மக்கள், பொது அமைப்புகள், விவசாய அமைப்புகள் என பலர் கலந்து கொண்டனர்.


DSC00349 l DSC00345 DSC00350

SHARE