சோமாலிய கடற்கொள்ளையனுக்கு 12 ஆண்டுகள் சிறை

771
கப்பலை கடத்தி மாலுமிகளை சித்திரவதை செய்த குற்றத்திற்காக சோமாலிய கடற்கொள்ளையனுக்கு ஜேர்மன் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.கடந்த மே 2010ம் ஆண்டு இரசாயன டாங்கர் கப்பல் ’மரிடா மார்கரெட்’ உட்பட 22 மாலுமிகள் கடத்தப்பட்டனர்.இவர்கள் 6 மாதம் கழித்து ஜேர்மன் கப்பல் நிறுவனத்தால் 5 மில்லியன் டொலர்கள் செலுத்தியபின் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 44 வயதான சோமாலிய கடற்கொள்ளை தலைவன் கடந்த 2013ம் ஆண்டு அகதி அந்தஸ்து கோரி போலி ஆவணங்கள் சமர்பித்த போது, விரல் ரேகையை வைத்து பொலிசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், விரிவான ஆதாரங்களின் அடிப்படையில், சோமாலியா கொள்ளையனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SHARE