சோக பாடல்கள் கேட்பதால் நீங்கள் நலமாவது எவ்வாறு?- காரணம் இதோ

296

625.400.560.350.160.300.053.800.748.160.70 (2)

பொதுவாக நாம் சோகமாக உள்ள போது சோகப் பாடல்களை கேட்பதுண்டு.

ஆனாலும் இச் சோகப்பாடல்கள் எவ்வாறு நமக்கு சுகத்தை தருகின்றது என நாம் அறிவதில்லை.

ஒரு புதிய ஆய்வொன்று நாம் கேட்கும் பாடலின் தன்மைக்கும், மூளையில் நடக்கும் செயற்பாட்டுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்திருந்தது.

இதில் சோகப் பாடல்கள் மிகவும் மகிழ்ச்சியை தருவதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இவை அனுகூலமான ஞாபகங்களை தூண்டுகின்றன.

இவ் ஆய்வு லண்டனைச் சேர்ந்த Durham University ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவர்கள் 2 436 மக்களில் தமது ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இங்கு மூன்று வகை விளைவுகள் பரிசீலிக்கப்பட்டிருந்தன; சந்தோசம், ஆறுதல், கவலை. இவ்வகை விளைவுகள் கேட்கும் பாடல்களால் தூண்டப்படுவது அறியப்பட்டது.

இதுபற்றி இவ் ஆய்வில் ஈடுபடாத உளவியலாளர் Adrian North கூறுகையில், நாம் சோகப்பாடல்களில் சுகம் அனுபவிப்பதற்கு நரம்பியல் விஞ்ஞான அறிவாற்றலும், சமூக உளவியலும் காரணமாகிறது என்கிறார்.சமூக உளவியல் என்பது நாம் சோகப்பாடல்கள் கேட்கையில் தோன்றும் உணர்வு இன்னொருவரை விட நாம் நலமாக இருக்கிறோம் என்பதை உணர வைக்கின்றது.

அதே போன்று சமூக உளவியலின் இன்னொரு கொள்கை சோகப்பாடல்கள் நம் சூழ்நிலைக்கேற்ப அமைவதால், அவை நம்முடன் இருப்பது போன்ற அதிர்வலைகளை தருவதாக சொல்கிறது.

நரம்பியல் விஞ்ஞானம் என்பது இப் பாடல்கள் நமது நரம்பியல், இரசாயனவியல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாக North இன் கருத்து.

சில விஞ்ஞானிகள் இச் சோகப் பாடல்கள் சோகங்களை விரட்டும் Prolactin ஓமோனை தூண்டுவதாக சொல்கிறார்கள்.

மற்றுமொரு கொள்கை, துக்கமானது கலைகள் மூலம் நாம் அனுபவிக்கும் உணர்வுகளால் ஏற்படுவதாக சொல்கிறது. உதாரணத்திற்கு நம்மை அழவைக்கும் திரைப்படத்தை சிந்தித்துப் பாருங்கள்.

ஆனாலும் தற்போதைய ஆய்வு இச் சோகப் பாடல்கள் நம் உணர்வை இருவகையிலும் பாதிக்கலாம் என்கிறது.

இங்கு சிலரில் சோகப் பாடல்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது அவதானிக்கப்பட்டிருந்தது.

இது அவர்களில் சோக நினைவுகளை தூண்டுவதாலேயே என்று சொல்லப்படுகிறது. இவ் ஆய்வு PLOS ONE எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE