சோதனையில் கண்டுபிடிக்கப்படும் ஆயுதங்கள் படங்களை வெளியிடுவதை  தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கோரிக்கை

181

சோதனை  நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மற்றும்  ஊடகங்களில் வெளியிடுவதை தற்காலிகமாக  தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.

அரசாங்க தகவல் திணைக்களதில் இன்று பத்திரிகையாசிரியர்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்க்குமிடையில்  விசேட  கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டது.

அரசாங்க  தகலவ் திணைக்கள  பணிப்பாளர்     நாலக்க கலுவெவ    பாதுகாப்பு பிரிவினர் தற்போது தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளார்கள். கடந்த மாதம்   நாட்டில்  ஏற்பட்ட அசம்பாவித்திற்கு அனைவரும்  ஒன்றினைந்தே தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்.  இதற்கு ஊடங்களின் பங்கு மிக  முக்கியமானது. கடந்த காலங்களில்  அரசாங்கம்  ஊடங்களில் முன்வைத்த பல கோரிக்கைகள்  வெற்றிகரமாக  நிறைவேற்றப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேசிய  நல்லிணக்கமும் மறுபுறம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.  இதற்கு   அனைத்து தரப்பினரது  ஒத்துழைப்பும் அவசியம்.  பெருந்தொகையான வாள்கள் தற்போது தொடர்ந்து மீட்கப்படுகின்றன. அவசரகால  சட்டம் நடைமுறையில் இருக்கும் போது  கடந்த காலங்களில் சாதாரணமாக  காணப்பட்ட விடயங்கள் இன்று முக்கியத்துவம் படுத்தப்படுகின்றது.

ஆகவே   வாள்  உள்ளிட்ட  ஆயுதங்கள் மீட்கப்படும்  போது அவற்றை  காணொளியாக்குவதுடன்,  சந்தேக்திற்கிடமான முறையில் கைது செய்யப்படுபவர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களில்   காட்சிப்படுத்துவதை தேசிய நல்லிணக்கம்,  மற்றும் பாதுகாப்பு  உள்ளிட்ட   காரணிகளை மையப்படுத்துவதை தற்காலிகமாக  தவிர்த்துக் கொள்ளுமாறு   அரசாங்கத்தினால் கோரிக்கை  விடுக்கப்பட்டது.

SHARE