ஜடேஜாவின் செயலால் அவுட் ஆன சர்பராஸ் கான்! கோபத்தில் தொப்பியை வீசிய ரோகித் சர்மா

92

 

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில், இந்திய அணி வீரர் சர்பராஸ் ரன்அவுட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

ரோகித் சர்மா 131
ராஜ்கோட்டில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில், இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்கள் குவித்துள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா 131 ஓட்டங்களும், ரவீந்திர ஜடேஜா (நாட்அவுட்) 110 ஓட்டங்களும் எடுத்தனர். அறிமுக டெஸ்டில் விளையாடிய சார்பராஸ் கான் அரைசதம் விளாசினார்.

அவர் 62 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மார்க் வுட்டினால் ரன்அவுட் செய்யப்பட்டார்.

ரன்அவுட்
அப்போது ஜடேஜா 99 ஓட்டங்களில் சதம் அடிக்க தடுமாறிக் கொண்டிருந்தார். அவர் Mid off திசையில் தட்டிவிட்டு ரன் ஓட சில அடிகள் முன்னே வந்தார்.

இதனால் மறுமுனையில் இருந்த சார்பராஸ் கான் வேகமாக ஓடி வந்தார். ஆனால் ஜடேஜா சட்டென நின்றுவிட, மார்க் வுட் வேகமாக செயல்பட்டு சார்பராஸ் கானை ரன்அவுட் செய்தார்.

இதனைப் பார்த்து பெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, கோபத்தில் அணிந்திருந்த தொப்பியை தூக்கி வீசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

SHARE