இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும், இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக ஐ.சி.சி.யில் இந்தியா புகார் செய்தது.
ஆண்டர்சன் மீது விசாரணை மேற்கொண்ட ஐ.சி.சி. அந்த வழக்கை ஆகஸ்ட் 1-ந்திகதிக்கு தள்ளி வைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜடேஜா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி., ஜடேஜாவுக்கு 1-வது விதியை மீறியதாக போட்டியின் சம்பளப் பணத்தில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்த உத்தரவிட்டது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஜடேஜா மீதான குற்றம் நீக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா, ஜடேஜாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் கருதிகிறேன் என்றும் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் எனவும் தெரிவித்தார்.