முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் 200 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வாடகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வாகனங்களின் பெறுமதி எட்டு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என அந்த அமைப்பின் அழைப்பாளரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க (Wasantha samarasinghe) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு
மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான வாடகை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாகனங்களுக்கு ஜனாதிபதி செயலர்களே பொறுப்பு என்பதால், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமரசிங்க, மேலும், இந்த வாகனங்கள் இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த ஜனாதிபதிகள் வாகனங்களை பயன்படுத்தினார்கள், எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது, வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.