ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழ்மக்களும் ஆதரவளிக்காமல் இருப்பதே சிறந்தது-இரணியன் –

734

MR MS 98988985மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன என்று போட்டியில் ஆட்சிபீடமேற எண்ணுகிறார்களே தவிர, தமிழ் மக்களின் நலன்கருதி எவருடைய செயற்பாடுகளும் அமையப்பெறவில்லை என்பதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டவுடன் தீர்மானங்களை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டிருக்கும தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சிந்திக்கவேண்டும். உங்களுடைய ஆய்வு தவறிப்போகக்கூடாது. இதனால் தமிழினம் அழிவின் பாதைக்கு செல்லக்கூடும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்படும் விடயங்களை இதுவரையில் ஆட்சிக்குவந்த எந்த அரசும் நிறைவேற்றியது கிடையாது.

ராமநாதன் & அருணாச்சலம்

ராமநாதன் & டட்லி

பண்டாரநாயக்க & டட்லி

ஜீ.ஜீ & செல்வா

செல்வா & பண்டாரநாயக்க

செல்வா & ஜே.ஆர்

ஜே.ஆர் & பண்டாரநாயக்க

பண்டாரநாயக்க & சிறிமாவோ

சிறிமாவோ & ஜே.ஆர்

அமிர்தலிங்கம் & செல்வநாயகம்

பிரபாகரன் & உமாமகேஸ்வரன்

பிரேமதாசா & ஜே.ஆர்

பிரேமதாசா & பிரபாகரன்

சந்திரிக்கா & பண்டாரநாயக்க
சந்திரிகா & சிறிமாவோ
குமாரதுங்க & சந்திரிகா
அனுரா & சந்திரிகா

கதிர்காமர் & சந்திரிகா

 

டக்லஸ் & சந்திரிக்காசந்திரிக்கா & பிரபாகரன்

பாலசிங்கம் & பிரபாகரன்

பிரபாகரன் & கருணா

சொல்ஹெயிம் & பிரபாகரன்

பிரபாகரன் & டக்லஸ்தமிழ் செல்வன் & சொல்ஹெயிம்

ரணில் & ஜே.ஆர்

கரு & ரணில்ரணில் & சந்திரிகா

ரணில் & பிரபாகரன்

ரணில் & கருணா

மஹிந்த & ரணில்

ரணில் & பொன்சேகாமஹிந்த & பிரபாகரன்

சொல்ஹெயிம் & மஹிந்த

கோத்தபாய & மஹிந்த

மஹிந்த & பசில்

மஹிந்த & டக்லஸ்மஹிந்த & கருணா

மஹிந்த & நாமல்

டி.எஸ்.சேனாநாயக்கா முதல் மஹிந்த ராஜபக்ஷ வரையில் 14 ஆட்சியாளர்கள் இந்நாட்டின் தலைமைப் பீடத்தில் இருந்திருக்கின்றார்கள். நடந்தது என்ன என்பது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களுக்கும் தெரியும். சிங்கள தேசம் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும், குடும்ப அரசியலை ஒழித்துக்கட்டும் நோக்கில் அவர்களுக்கிடையில் சண்டைகளை ஏற்படுத்தி ஆட்சியை மாற்ற நினைக்கின்றார்கள். இதற்கு நாம் பலிக்கடாவாகிவிட முடியாது.

திம்பு முதல் டோக்கியோ வரை என எத்தனையோ பேச்சுக்கள் மாறி மாறி வந்த அரசாங்கங்களுடன் மேற்கொண்டு நிறைவேறாமல் போயிருக்கின்றன. இவற்றினையெல்லாம் நாம் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கின்றோம். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் செம்மணி புதைகுழியினை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களே செய்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் துணிச்சல் மிக்கபோராட்டத்தின் காரணமாக சந்திரிக்கா அரசிற்கு பாரிய இழப்புக்களைக் கொடுத்ததன் விளைவே விடுதலைப்புலிகளினுடைய பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்திருந்தார். அதேநேரம் பிரபாகரனுடன் 2004ம் ஆண்டு சந்திரிக்கா கடிதப் பரிமாற்றங்களையும் செய்துகொண்டார்.

இறுதியில் சந்திரிக்காவும் தமிழினத்திற்கு துரோகத்தினை ஏற்படுத்தி, லக்ஷ்மன் கதிர்காமருடன் இணைந்து சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்தார். இக்காலகட்டத்தின்பொழுது வேறுவழியின்றி தனது ஆட்சியை மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் ஒப்படைத்தார். சிறிது காலம் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பண்டாரநாயக்கா குடும்பத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திவந்த போதும் நாளடைவில் அவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டினார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தொடர்ந்து முன்னெடுத்துவந்த மஹிந்த ராஜபக்ஷ இரு முறை ஜனாதிபதியாக ஆட்சி செய்தார். மூன்றாம் முறையும் ஆட்சி செய்வதற்கு பாரிய சவால்களுக்கு மத்தியில் முனைந்து வருகின்றார்.

இவரது ஆட்சிக்காலத்தில் மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் இனவழிப்பு என்ற போர்வையில் முள்ளிவாய்க்காலில் முடிவுபெறச் செய்தார். இன்று சர்வதேச குற்றவாளியாக காணப்படும் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகினால் நேரடியாகவே கூட்டிற்குள் அடைபடவேண்டிய நிலை ஏற்படும். தனது குடும்ப அரசியல் இருந்தால் அது தனக்கு சாதகமாக அமையும் என்பதனால் பாரிய முயற்சிகளை சீன அரசின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றார். சீனாவும் அதற்கேற்ற உதவிகளை வழங்கிவருகின்றது.

இவை இவ்வாறிருக்க தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் முற்றுப்பெற்று காட்டிக்கொடுத்த மற்றும் சரணடைந்த போராளிகளின் அடுத்த கட்ட நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. தற்பொழுது கூட்டுச்சேர்ந்திருக்கக்கூடிய சரத்பொன்சேகா, ஜாதிக ஹெல உறுமய, சந்திரிக்கா, ரணில் விக்கிரமசிங்க, இதனை விட 35 அமைப்புக்கள் என இதில் மூவர் இனவழிப்பினைச் செய்தவர்கள். அதில் குறிப்பாக இறுதிப்போரை முடிவிற்குக் கொண்டுவந்தது மஹிந்தவோ கோத்தபாயவோ அல்ல என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சரத்பொன்சேகா அவர்களே இது தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு கட்டளைகளை பிறப்பித்தவர்கள் தான் இவர்கள். ஆனால் நானோ நேரடியாக களத்தில் நின்றவன். ஜனாதிபதி பிரேமதாசவினுடைய மகன் சஜித் பிரேமதாச அவர்கள் எஞ்சியுள்ள புலிகளையும் அழித்தொழிப்பேன் எனவும் எனது தந்தை தான் புலிகளை அழித்தொழிக்க ஆயுதம் வழங்கியவர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். கூட்டுக்கட்சியாக இணைந்திருப்பவர்கள் அனைவருமே இனவாதிகள்.

நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால (03.12.2014)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தவிர பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில் பிரதான இடம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பௌத்த துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடனான தேர்தல் ஒப்பந்தத்திலேயே மேற்குறித்த இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மேலதிக அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி முறைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான வழிமுறையாக முன்வைத்தனர். அதனை மைத்திரிபால சிறிசேன ஜாதிக ஹெல உறுமயவுடனான ஒப்பந்தத்தை நிராகரித்து தானும் ராஜபக்ஷவிற்கு இணையான பௌத்த சிங்கள பேரினவாதி எனக் கூறியுள்ளார்.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து குறிப்பிடத்தக்க எந்தக் கட்சிகளும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அதனை மக்கள் மயப்படுத்தவில்லை. தேர்தல் நோக்கில் தமது தொகுதித் தமிழர்களின் வாக்குகளை வாங்கிக் கொள்வதற்காக விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற புறக்கணிக்கத்தக்க தனி நபர்கள் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதாகப் பேச்சளவில் ஒத்துக்கொள்கின்றனர். இடதுசாரிக் கட்சி எனக் கூறும் பேரினவாதக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்றவை மாநில சுயாட்சியைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
இலங்கை அதிகாரவர்க்கம் சிங்கள தமிழ் முரண்பாட்டை ஆழப்படுத்துவதன் ஊடாகவே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை மைத்திரிபால சிறிசேன உட்பட்ட அனைத்து வாக்குப் பொறுக்கிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். இவர்களின் பேரினவாதக் கருத்தியலுக்குத் துணை செல்லும் வகையிலேயே ஏகாதிபத்தியங்களால் தேசிய விடுதலைப் போராட்டம் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு எதிரான யுத்தமாகக் கட்டவீழ்க்கப்பட்டிருந்தது.

சில தமிழ் கட்சிகள் எங்களோடு கூட்டு சேர்ந்துள்ளது, அவர்களுக்கு எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளோம். மஹிந்த எந்த வழியில் வழி நடத்தினாரோ அதே போன்றுதான் எனது நிலைப்பாடும் தமிழர்கள் விடயத்தில் இருக்கும். நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது கட்சி ரீதியாகவோ தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு தருமாறு கேட்கவும் இல்லை. இந்த தேர்தல் குறிப்பாக எமது சிங்கள மக்களின் நலனுக்காகவே தவிர தமிழர்களின் தீர்வுக்கானதல்ல.

சிங்கள உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து பிரிந்து செல்லும் உரிமைக்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்படும் வரை இரண்டு பக்க இனவாதிகளும் பிழைப்பு நடத்துவார்கள். தேர்தலுக்கு முன்னதாகவே தானும் இனவாதி எனக் கூறும் மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஷவிற்கு மாற்று அல்ல, ராஜபக்ஷவின் பிரதியீடு. ஒட்டு மொத்தத்தில் எவன் வந்தாலும் தமிழனுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. தனது இனத்துக்காக ஒன்று சேர்ந்துள்ள சிங்கள பேரினவாதிகளுடன் எமது சில தமிழ் தலைமைகளும் கூட்டு.
அவர்கள் அனைவரும் ஒன்று சேரும் போது மாயாஜால தமிழ் அரசியல் தலைமைகள் ஏன் ஒன்று சேரக் கூடாது. இனியும் முட்டாள்கள் ஆனால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போகும் அளவுக்கு நிலைமை மாறிவிடக் கூடும். அவர்கள் செய்வது போன்று ஒரு தடவை தமிழர்கள் ஒன்று சேர்ந்து பாருங்கள் எந்தளவு மாற்றத்தை உண்டு பண்ண முடியும் என்று.
சிந்தித்து செயற்பட்டால் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும், பணத்துக்கும் பதவிக்கும் சொந்த நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யாதே தமிழ் தலைமைகளே.

இவ்வாறு கூறிக்கொள்ளும் இவர் எவ்வாறு தமிழ் மக்களினுடைய விருப்புவெறுப்புக்களை அல்லது அபிலாசைகளை நிறைவேற்றித்தரப்போகின்றார். பாரிய இனவழிப்பினை இந்த அரசுகள் மாறி மாறி மேற்கொண்டுவந்தபொழுது கண்ணை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் மத்தியஸ்தம் எமக்கு தீர்வினைத் தரும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எண்ணிக்கொண்டிருப்பது தவறான விடயமாகும். மற்றுமொரு விடயம் என்னவென்றால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களியுங்கள் எனக்கூறினால் பல்வேறு பிரச்சினைகள் எழும். அதேநேரம் மைத்திரிக்கு வாக்களியுங்கள் எனக்கூறினாலும் பிரச்சினைகள் இருக்கின்றன. இதில் ஒன்று நடுநிலைமை வகிக்கவேண்டும். அல்லது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேண்டும். நாம் வெல்லவேண்டும் என்று அல்ல. பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு.

தற்போது அதிகாரத்தில் இருக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடபகுதி தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்த்துத்தருகின்றேன். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் குழப்பமடையும் நிலையும் ஏற்படும். காரணம் ஒரு இனவாதத்தினைச் செய்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களிற்கு வாக்களிப்பதா? என்கின்றதானதொரு கேள்வியும் எழுகின்றது.
அதேநேரம் ரணில் விக்கிரமசிங்கவும் இனவழிப்பினை மேற்கொண்டார். குடும்ப அரசியல் செய்யாததற்கு காரணம் இருக்கின்றது. அவருக்கு குடும்பத்தில் பிள்ளைகள் இல்லை. பிரேமதாசா அவர்கள் குடும்ப அரசியல் செய்தார். பண்டாரநாயக்கா அவர்கள் குடும்ப அரசியல் செய்தார். ஜே.ஆர்.குடும்ப அரசியல் செய்யவில்லை ஆனால் அவர் அரசியல் இராஜதந்திரி. பாராளுமன்றத்தின் யாப்பினை வைத்தே அவருடைய அரசியலைக் கடத்தி இயற்கை மரணம் எய்தினார். தற்பொழுது இருக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் குடும்ப அரசியலினைச் மேற்கொள்ளும் நோக்கில் செயற்பட்டுவருகின்றார். குறிப்பாக ஆசிய நாடுகள் உறவினர்களை தமது ஆட்சியில் வைத்திருப்பது வழக்கம். அதனையே மஹிந்த ராஜபக்ஷவும் செய்திருக்கின்றார். ஆனால் ஐரோப்பிய நாடுகள் அவ்வாறில்லை.

இலங்கை மற்றும் இந்தியாவினைப் பொறுத்தவரை இவ்வாறானதொரு ஆட்சிமுறையே இருக்கின்றன. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் தமிழ் மக்களை மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களியுங்கள் எனக்கூறும்போது, இனவழிப்பினை மேற்கொண்ட அவருக்கு வாக்களிப்பதா என்ற கேள்வியும் எழும். அதேநேரம் ஏனைய சிங்கள தலைமைத்துவங்களும் இனவழிப்பினையே செய்துவந்தன. இது வரலாறு அறிந்த உண்மை. மைத்திரிபாலவிற்கு வாக்களிக்கும் பட்சத்தில் பாரிய எதிர்ப்பினை கூட்டமைப்பு சந்திப்பதோடு, மைத்திரிபால சிறிசேன தன்னை இனவாதியாக காட்டியிருக்கும் அதேநேரம் இவருக்கு வாக்களிப்பதால் எவ்வித பயனும் இல்லை.

பாராளுமன்றத் தேர்தலில் மாத்திரமே எம்மைப் பலப்படுத்தி தொடர்ந்துவரும் எமது சந்ததியினர் அரசியலில் இணைந்திருக்கவேண்டுமானால் இரண்டு இனவாதிகளுக்குமே வாக்களிக்காமல் இருப்பது சிறந்தது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருக்கக்கூடிய சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொன்.செல்வராசா, சரவனபவான், சிறிதரன், அரியநேந்திரன் இவர்களை விடவும் தமிழரசுக்கட்சியின் பல ஆலோசகர்கள், சட்ட வல்லுனர்கள் என இவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து சிறந்த தீர்மானங்களை மேற்கொள்வது தமிழ்மக்களின் அரசியலுக்கு சிறந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் நடுநிலைமை வகிப்பதனூடாக வடகிழக்கு தமிழ் மக்கள் தமது சுயவிருப்பின் மூலம் வாக்களிக்கக்கூடும். தன்மானமுள்ள தமிழன் எமக்கு தீங்கு வரும் செயல்களுக்கு இணைந்து செயற்படமாட்டான் என்பது உண்மை.

மைத்திரிபால சிறிசேனவின் அடுத்த நகர்வானது எவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் பண்டாரநாயக்க பரம்பரையை அரசியலில் இருந்து தூக்கியெறிந்ததோ அதேபோல, ரணில் விக்கிரமசிங்கவும் வெளியேற்றி நானே ராஜா நானே மந்திரி என்று மாறும் நிலையும் ஏற்படும். சிங்கள அரசுகளினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தேர்தலுக்கும் இன்னும் சில காலங்களே எஞ்சியிருக்கின்ற காரணத்தினால் நீண்டமுறையில் சிந்திப்பதற்கு நேரம் இல்லை. பொன்சேகாவிற்கு வாக்களித்ததன் நிமித்தம் மஹிந்த அவர்கள் வடகிழக்குப் பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளாது இருக்கவில்லை. வருகின்ற அரசாங்கங்கள் எதுவாயினும் நாட்டின் விதிமுறைப்படி மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய நிலைப்பாடு இருக்கின்றது. ஆகவே வில்லங்கத்தை விலைக்கு வாங்காது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் இருந்து விலகுவதே சிறந்தது. ஆய்வாளர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் பலருடைய கருத்தும் உள்வாங்கப்பட்டே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இதனையும் கவனத்திற்கொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாகிய நீங்கள் தமிழ்மக்களின் நலனில் அக்கறைகொண்டு, இராயப்பு ஜோசப் கூறியதைப்போன்று சம்பந்தன் முட்டாள்தனமான தீர்வுகளை ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ளமாட்டார் என்பதற்கமையவும் செயற்பட்டால், தமிழினம் தலைநிமிர்ந்துவாழ வழியமைக்கும். இல்லையேல் ஆண்டாண்டுகாலமாக அடிமைத்தன வாழ்க்கையையே வாழவேண்டிய நிலை தொடரும்.

 

THINAPPUYAL NEWS

SHARE