ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்தே 2015ம் ஆண்டிற்க்கான வரவுசெலவுத்திட்டம் பூச்சாண்டிகாட்டிய மஹிந்தராசபக்ஷ – TNA மாவைசேனாதிராஜா

549

tna2410214_1
தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமாகிய மாவைசேனாதிராஜா 2015ம் ஆண்டிற்க்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை தொடர்பில் தொடர்ந்து கருத்த்துத்தெரிவிக்கையில்;;;; அரசஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகை ஒதுக்கியுள்ளார்தான் ஆனாலும் சாதாரண மக்களும் இதனால் பயன் பெறுவார் என்று கூறமுடியாது.

tna2410214_1

 

tna2410214_4வடஃகிழக்கிற்கு பாரியளவில் நிதி ஒதுக்கப்படவில்லை அதாவது பாதுகாப்பு அமைச்சினூடகவும் , பொருளாதார அமைச்சினூடகவும் சொற்ப ஒதுக்கீடுகளே வடபகுதிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

மக்களுடைய வாழ்க்கைச்செலவைக் குறைப்பதற்கு இந்த பயற் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை தனியார், தோட்டத்தொழிலாளர்கள், தொழிற்சாலைகள், விவசாயிகள், கடற்றொழிலாளிகள் இவர்களுக்கு இதனால் நன்மை கிடைக்குமென்று நாம் நினைக்கவில்லை தேர்தலுக்காக பல முன்னெடுப்புக்களை செய்துள்ளார் என்றே கூறவேண்டும். ஏயர்லங்கா, மீன்லங்கா இந்த இரண்டு விமான நிறுவனங்களுக்கும் கூடுதலான நிதிஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதிகளெல்லாம் மக்களின் வரிப்பணத்திலிருந்து அறவிடப்பட்டு கடன் அடைக்கப்படும் என்று நினைக்கிறேன். குறிப்பாக இந்த பயற்றினால் தமிழ்மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பிட்டளவு பயற் ஒதுக்கப்பட்டாலும் தமிழ்மக்களின் போராட்டம் சுயநிர்ணய உரிமை இரண்டிற்கும் அவசியமற்றது என்றே நான் கருதுகின்றேன் என்றார் மாவைசேனாதிராஜா.

SHARE