ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வாக அமைந்துவிடப்போவதில்லை-தமிழீழம்  மலருகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

528

 

இந்த நாட்டிலே கோத்தபாய ராஜபக்ஷh அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உண்மையில் இந்த நாட்டில் என்ன
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்ன நடக்கப்போகின்றது அல்லது கோத்தபாஜ ராஜபக்ஷh அவர்கள் ஜனாதிபதி ஆன
பிற்பாடு தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகின்ற நன்மைகள் என்ன? அல்லது இவர் ஏன் இவ்வாறு ஜனாதிபதியாக சிங்களப்
பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கின்றது.


உண்மையில் அந்த வகையில் நாம் பார்க்கின்ற முதலாவது விடையம் என்னவென்று சொன்னால் இந்த தேர்தல் வெற்றி என்பது
ஒரு நிரந்தரமற்ற வெற்றியாகத் தான் காணப்படுகின்றது காரணம் என்னவென்று சொன்னால் இது ஒரு காபந்து
அரசாங்கம் என்று சொல்லிக் கூறுவார்கள். ஐந்து மாதங்களோ அல்லது நான்கு மாதங்களோ அதோட கூட இந்த அரசாங்கம்
முடிவுக்கு வரும். மக்கள் பிரதி நிதிகளை மாகானசபைக்கு அல்லது பாராளுமன்றத்துக்கோ தொடர்ந்து தெரிவு செய்வதன் ஊடாக
தான் உண்மையிலே அது ஒரு நிலையான அரசாங்கமாகத் தெரிவு செய்யப்படும்.
இந்த வடக்கு கிழக்கிலே கோத்தபாய ராஜபக்ஷh அவர்களை தமிழ் மக்கள் நூற்றுக்கு பத்துவீதமான மக்கள் தான் ஏற்றுக்
கொண்டிருக்கின்றார்கள். அதுவும் அரச தரப்போடு வக்காளத்து வாங்கிய பல கட்சிகள் இருக்கின்றன கிழக்கு மாகானத்திலே
பதினாறு கட்சிகள் அரச தரப்போடு வங்காளத்து வாங்கியது. அது போன்று வடக்கிலே நீங்கள் பார்க்கின்ற பொழுது
ஏழு, எட்டுக் கட்சிகள் அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்க ஆனால் அந்த வக்காளத்து வாங்கிய அனைத்துக் கட்சிகளுமே
தோல்வியிலே தான் முடிவடைந்தது. இருந்தாலும் கூட தமிழ் மக்கள் தேசியம் சுயநிர்ணய உரிமை என்ற ஒரு நிலைப்பாட்டைக்
ககையிலே எடுத்து அந்த வாக்கை உண்மையிலே வழங்கியிருக்கின்றார்கள். இருந்தாலும் கூட  இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரமுடியும். ஒன்றில் சஜித் பிரேமதாசா அல்லது கோத்தபாய
ராஜபக்ஷh என்ற நிலைதான் தற்பொழுது இருந்தது அகவே மக்கள் உண்மையிலே ஒரு வண்முறையை மேற்கொள்ளாது. அல்லது
அதனைக் கொண்டு வராத ஒரு தலைவரை தெரிவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

ஆனால் தென்னிலங்கையிலே பிரச்சாரம் வேறு விதமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. உண்மையிலே அங்கு இனவாதம்,
மதவாதம் தேசியவாதம் போன்ற விடையங்கள் கக்கப்பட்டு பின்னர் அது அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் அவ்வாறு
நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று பதின்மூன்றுலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி
கோத்தபாய ராஜபக்ஷh அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார். இது ஒரு புறமிருக்க உண்மையிலேயே இதனுடைய
சுபிஜ்சமோகங்கள் என்னவென்று சொன்னால் உண்மையிலே தமிழர்கள் தரப்பிலே அல்லது தமிழ் மக்களுக்கான
தீர்வுத்திட்டத்தை எந்த அரசாங்கம் வந்தாலும் கொடுக்கக் கூடாது என்பதை தற்பொழுது ஆணித்தரமாக ஜனாதிபதித் தேர்தல்
எடுத்துக் காட்டுகின்றது. சிங்கள மக்களுடைய பெரும்;பாண்மை இந்த நாட்டிலே உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகக்
கூறுகின்றார்கள். பெரும்பாண்மை இருந்தாலும் கூட ஏன் இந்தப் போராட்டம் இந்த நாட்டிலே உருவானது. தமிழ் மக்களுக்கான
அடக்கு முறை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்த காரணத்தினால் தான் உண்மையிலே தமிழ்ப் போராளிகள் அணைவரும்
ஆயும் ஏந்தி அமைப்புக்கள் அணைத்தும் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டியதொரு சூழல் இந்த நாட்டிலே உருவானது.
மீண்டும் இந்த ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற இந்தச் சூழ்நிலையை கோத்தபாய ராஜபக்ஷh அவர்கள் மீண்டும்
உருவாக்குவாரா? அல்லது உருவாக்காமல் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து செல்வாரா? என்கின்ற ஒரு விடையத்தை நாங்கள் இங்கு
அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். அந்தவகையிலே உலக நாடுகளைப் பொறுத்தவரையிலே அவர்கள் ஒரு ஆயுத சந்தையிலே
ஒரு குலோபல் செக்சன் ஆயுத சந்தையிலே ஒரு வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆயுத சந்தையிலே
அவர்களுடைய ஆயுதங்கள் பாவிக்கப்படவேண்டும் என்பதிலே அவர்கள் முன்னிலையிலே இருக்கின்றார்கள்.
அது மட்டுமல்லாது கடல் மார்க்கமாக தங்கள் சென்று வருவதற்கான எந்தவிதத் தடைகளும் ஒரு நாட்டில் இருக்கக் கூடாது. அதுவும்
குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரையிலே ஒரு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருக்கின்றது. அந்த வகையிலே
ஆகவே இந்த நாட்டை தன் கைவசம் வைத்திருக்கவேண்டும். என்று அமெரிக்கா ஒரு புறத்திலும், மறு புறத்திலே சீனாவும், மறு
புற்றத்திலே இந்தியாவும் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றனர். அதனுடைய போட்டியினுடைய விளைவு தான் உண்மையிலே
தமிழீழம் கூட இறுதியிலே கிடைக்கமுடியாமல் போனது ஆனால் காலாண்டுகளிலே இந்த தமிழீழம்  மலருகின்ற
சூழ்நிலை உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஏனென்றால் ஒரு வண்முறைக் கலாச்சாரத்தை பிரபாகரனுடைய தலைமையிலே
தான் இந்த தமிழீழம் உருவாக்கப்படவேண்டும். அதே நேரம் வடகிழக்கு இணைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் என்றொரு
நிலைப்பாடு இருக்க அவருடைய ஆட்சி முறைமை தேவையில்லை என அவரை கொண்டு வரக்கூடாது என்று தான் இந்த நாடுகள் மும்முரமாக
நின்றன கிட்டத்தட்ட 57 நாடுகள் 29 அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளிலே மும்முரமாக
கைகோர்த்து நின்றார்கள். ஆனாலும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அந்த சர்வதேசப் பேச்சுவார்த்தைகள் அணைத்தும்
முடக்கப்பட்ட நிலையிலே யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த யுத்தமானது மாவீலாறிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு
முள்ளிவாய்க்காலிலே முடிவடையும் ஒரு சூழல் ஏற்பட்டது. இதிலே கிட்டத்தட்ட அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட
இராணுவத்தினர் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். முப்பத்தையாயிரம் போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்
கொண்டுள்ளார்கள். தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்று சிந்திக்கவேண்டும் தமிழ் மக்களுக்கான உரிமை மறுக்கப்படுகின்ற
போது உண்மையிலே இந்தக் ஆயுதக் கலாச்சாரம் இந்த மண்ணிலே உருவானது. அதே போன்று நீங்கள் பார்க்கின்ற
பொழுது தென்னிலங்கையைப் பொறுத்தவரையிலே அறுபத்தெட்டாயிரம் ஜேவிபியினர் கொலை செய்யப்பட்டார்கள்.
ஜெயார் ஜெயவர்த்தனா காலப்பகுதிகளிலே இவையும் ஒரு புறமிருக்க மீண்டும் இந்த நாட்டிலே ஒரு ஈழப்போர் ஐந்தாம் கட்ட
ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு இந்த அரசாங்கம் உறுதுணையாகி விடக்கூடாது. அதாவது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh
அவர்களும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷh அவர்களும் தெளிவாகச் சிந்திக்கவேண்டும். இந்தமுறை தமிழ் மக்கள் ஏன்
கோத்தபாய ராஜபக்ஷh அவர்களுக்கு உகந்து வாக்களிக்கவில்லை அந்தொரு காரணத்தை நிச்சயமாக அவர்கள் அறிந்து
கொள்ளவேண்டும். இவர்கள் தமிழ் மக்களுடைய மனதை தொடர்ந்தும் இடம்பிடிப்பார்களா? அல்லது தொடர்ந்தும் வன்முறைக்

கலாச்சாரங்கள், வெள்ளைவான் கலாச்சாரங்கள், ஆட்கடத்தல் விவகாரங்கள், கிறிஸ்பூதங்கள் போன்ற விடையங்களை
இந்நாட்டில் கட்டவிழ்த்து விடுவார்களா? என்ற சந்தேகம் தற்பொழுது எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்கு
பார்த்தாலும் கோத்தபாய ராஜபக்ஷh ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர். இராணுவக் கலாச்சாரம். அதாவது
இராணுவத்தினுடைய பிரசங்கமே கூடுதலாக இருக்கின்றது. வீதிகளில் எங்கு பார்த்தாலும் இராணுவத்தின் பிரசங்கம் கூடுதலாக
இருக்கின்றது. ஆகவே இந்த நடைமுறை உண்மையிலே மாற்றப்படவேண்டும். மாவீரர்களுக்கு விளக்கேற்றி அவர்களை
வழிபடுவதற்கான வழிபாடுகளைக் கூட மட்டுப்படுத்தியிருந்தார்கள். ஒரு சில இடங்களில் தான் இது அனுஸ்டிக்கப்பட்டது. அதாவது
படையினருக்கு இடையூறு செய்யவேண்டாம் என்றொரு கோசத்தையும் அதாவது வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலே
அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். உண்மையிலே இது ஒரு மனவேதனை அளிக்ககூடிய விடையம். ஆனாலும் ஒரு விடையத்தை இந்த
மஹிந்த தரப்பு அல்லது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh அவர்கள் விளங்கிக் கொள்வாராக இருந்தால் நிச்சயம் தமிழ்
மக்களுக்கான ஒரு தீர்வு எட்டப்படும் அது மட்டுமள்ளாது. உண்மையிலே இந்த அரசாங்கத்தை அனுகிப்போகக் கூடிய சூழலை
உருவாக்கப்படும். தற்பொழுது எமது தினப்புயல் ஊடகத்திற்குக் கூட அண்மையிலே அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கின்றது. எமது
ஊடகவியலாளர்களின் விபரங்கள் அடையாள அட்டைகளைப் பதிவு செய்து தருமாறு கேட்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் அதனை ஒரு சரியான முறையில் எமக்கான தகவல் கிடைக்கப்பெற்றால் மாத்திரம் வழங்குவோம் என்று அதற்குப்
பதிலளித்திருக்கின்றோம். இப்படியெல்லாம் நடக்கும், வரும் என்று தெரிந்து தான் இந்த ஊடகத்துறைக்குள் காலடி
வைத்திருக்கின்றோம். அந்தடிப்படையில் மீண்டுமொரு வண்முறைக் கலாச்சாரம் அல்லது ஆயுதக் கலாச்சாரம்
உருவாக்கப்படுமாக இருந்தால். இந்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈபிடிபி போன்ற இயக்கங்கள் எல்லாம்
அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு வழங்கி மீண்டும் இந்தப் பேராட்டம் சிங்கள அரசபடைகளுக்கு எதிராக
மேற்கொள்ளப்படுகின்ற பொழுது அதனைக் காட்டிக் கொடுப்பவர்களாகவே இவர்களை வைத்திருப்பார்கள் இது போன்று கருணா,
பிள்ளையான் போன்றவர்களும் அவர்களுடைன் இணைந்து செயற்படுகின்ற ஒரு நிலை உருவாக்கப்படும். இப்பொழுது
ஆயுதக்கட்சிகள் அணைத்தையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh அவர்கள்  அணைத்து
செயற்பாடுகளையும் தற்பொழுது முடக்குகின்ற இவர்கள் தற்பொழுது தங்களது அரசியலுக்குத் தேவையில்லை. ஆகவே மக்களை ஒரு
ஜனநாயக வழிப்படுத்தி இவர்களை மேற்கொள்ளுவோம் என்றொரு பாணியில் தான் தற்பொழுது ஜனாதிபதி கோத்தபாய
ராஜபக்ஷh அவர்கள் களமிறங்கியிருக்கின்றார்.

அவருடைய நடவடிக்கைகள் அணைந்தும் ஒரு ரஷ;சியாவினுடைய பிரதமர்
போன்றும் ஒரு திடீர் திருப்பமாக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
ஆகவே மீண்டும் அதாவது தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லையென்று சொன்னால் உறுதிகளாக இருக்கக் கூடிய
தமிழ்த் துரோகக் கும்பல்களை தம்மோடு இணைந்துக் கொண்டு இந்த தேசியம் சுயநிர்ணய உரிமைக்காக போராட்டத்தை
உருவாக்குபவர்களாக இருந்தால். அந்தப் போராட்டத்திற்கு எதிராக இவர்கள் மறுபடியும் களமிறங்குவார்கள். உங்களுக்குத்
தெரியும் எத்தனையோ சோதனைச் சாவடிகள், எத்தினையோ இடங்களில் அன்றன்று மக்கள் காணாமல் போய்க்கொண்டே
இருப்பார்கள். இராணுவ முகாம்கள், சித்திரவதைகள் போன்றவையும் இந்த நாட்டிலே அவ்வாறு அடக்குமுறை தொடருமாக
இருந்தால் நிச்சயமாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. ஆகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கான ஒரு
தீர்வாக அமைந்துவிடப்போவதில்லை. ஆகவே தமிழ் மக்களாகிய நாம் எமது அடுத்தடுத்த அரசியல் களங்களைப்
பலப்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. அணைத்து தமிழ்த் தரப்பும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டிய
காலம் கட்டாய தருணம் ஏற்பட்டிருக்கின்றது என்பதையே இந்த ஜனாதிபதித் தேர்தல் எமக்கு எடுத்துரைத்திருக்கின்றது.
சிங்களப் பேரினவாதம் தாம் முதல் இடத்தில் இருக்கின்றோம் என்பதை தற்பொழுது அவர்கள் நிறுவியிருக்கின்றார்கள்.
அது போன்று தமிழ் மக்களும் நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை அவர்களுக்குக் காட்டியிருக்கின்றோம்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த கால கட்டத்திலே இருபத்தைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள்
எடுத்தது போன்று இந்தமுறை வாக்களிக்கப்பட்ட விகிதம் இருக்கின்றது. அந்த வகையிலே நாம் தொடர்ந்தும் ஒவ்வொரு
நடவடிக்கைளையும் முன்னெடுக்கின்ற பொழுது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை நோக்கி நாங்கள் முன்னெடுப்புக்களைக்
எடுக்கவேண்டும் என்பதைக் கூறிக்கொண்டு நிச்சயமாக தற்பொழுது வந்திருக்கின்ற புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh
அவர்கள் தமிழ் மக்களுக்கான அபிராiஷகளை பூர்த்தி செய்கின்ற வகையில் செயற்படுவார். அல்லது செயற்படாது
போனால் மறுபடியும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி இந்த அரசுக்கு எதிராக வண்முகைளைக் கட்டவிழ்க்கவேண்டிய ஒரு
சூழ்நிலை உருவாகும். ஆகவே இந்த அரசு இவ்வாறு ஒரு பத்தாண்டுகள் செல்லுமாக இருந்தால் பாரியதொரு நெருக்கடியை இந்த
நாட்டிலே சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். டயஸ்போரா மற்றும் பல்வேறு அமைப்புக்கள் கூட பல திட்டங்களை தீட்டி வந்து
கொண்டிருக்கின்றன. இங்கு இருக்கக் கூடிய பல தளபதிகளுடன் கூட விடுதலைப்புலிகளின் தளபதிகளுடன் பல தொடர்புகளை
ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த நாட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதனை அவதானித்துக்
கொண்டிருக்கின்றார்கள். உண்மையான போராளிகள் என்கின்ற பொழுது பல போராளிகள் ஆயிரத்து ஐநூறு
போராளிகள் வெளிநாடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதில் நாங்கள் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை
உருவாக்கியோ மீண்டுமொரு ஆயுதப்போராட்டம் எம் நாட்டுக்கு வருவதை ஊடகரீதியாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் ஒரு துப்பாக்கியமான நிலைக்கு எங்களைக் கொண்டு செல்லும் ஆகவே
கோத்தபாய ராஜபக்ஷh, மஹிந்த ராஜபக்ஷh குடும்பமும் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகளை
மேற்கொள்ளுவார்களாக இருந்தால் நிச்சயமாக இந்த நாடு ஒரு குட்டிச் சிங்கப்பூராக மாற்றப்படும். என்பதனைக் நாம்
கூறிக்கொள்ளுகின்றோம்.

ஊடறுப்பான்

SHARE