ஆராய்ச்சி என்கிற பெயரில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் நிலைமைகள் தற்போது உருவாகியுள்ளது. இதனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் பௌத்த தேரர்களை வைத்தே காய்நகர்த்தி வருகிறார். கடந்த காலங்களிலும் பொதுபல சேனா, ராவண பலய போன்ற அமைப்புக்களினூடாக இவ்வாறான செயற்பாடுகள் முன்னகர்த்தப்பட்டது.
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர் என்பவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டதுடன், அரச அதி காரிகளின் செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படும் விதத்தில் செயற்பட்டுள்ளார். இவ்வாறு நாட்டில் குழப்பவாதிகளாகச் செயற்படுபவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இவருக்கு நிலுவையில் பல வழக்குகள் இருக்கிறது.
இந்த சுமன ரத்ன தேரர் விடுதலைப்புலிகளின் காலத்தில் அமைதியாக செயற்பட்டவர்.தற்போது தமிழினத்திற்கு எதிரா கவும் அரசாங்கத்தைத் திருப்திப் படுத்தும் வகையில் பௌத்த தேரர் என்ற முத்திரையை தரித்துக் கொண்டு அராஜகத் துறவியாக செயற்பட்டு வருகின்றார். இவருடைய செயற்பாடுகளை அடக்கி ஒடுக்க தமிழினம் கிழக்கு மாகாணத்தில் ஒன்றுபட வேண்டும்.
ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்க தனத இனவெறி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் இந்தியா விஜயத்தின் பின் இரகசிய ஒப்பந்தங்களை கைச்சாத்து இட்டது மட்டுமன்றி சீனாவின் நட்புறவில் இருந்த விலகுவதற்கும் சீனாவை அப்புறப்படுத்துவதிலும் அதிதீவிரம் எடுத்துளார் என்பது புலனாய்வு தகவல்
பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர் தொடர்பில் வாயறிக்கைகளை மாத்திரம் வெளியிட்டுவிட்டு மௌனிப்பில் இருக்கிறார்கள். இவருடைய சத்தத்திற்குப் பயந்து சட்டமும் செயற்படுகிறது. எமது உயிரை கொல்ல வருகின்ற ஒருவரை நாம் கொல்ல முடியும். ஆகவே சுமன ரத்ன தேரர் மக்களால் விரை வில் தண்டிக்கப்படவேண்டியவர். பௌத்த துறவிகள் இந்த நாட்டை பௌத்த நாடு என விழித்து வருவதால் அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றது. மகாவம்சம் என்பது திரிபுபடுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளது.
20ஆவது திருத்தச்சட்டம் என்பது சிறுபான்மை இனத்தைப் பாதிக்கின்ற வகையில் அமைந் துள்ளது. குறிப்பாக இன, மத, மொழி, நிலப்பரப்பு, வடகிழக்கு இணைப்பு போன்ற விவகாரங்கள் சிறுபான்மை இனத்துக்கு பாதகமா கவே அமையப்பெற்றுள்ளது. அபிவிருத்தி என்பது குறித்த அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமை.
ஆகவே தமிழர் உரிமைக்காகப் போராடியதை பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தடைகளைப் பிறப்பித்து தமக்குச் சாதகமான நிலைமைகளை இலங்கையரசு உருவாக்கியுள்ளது. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும் இந்தப் போரில் உயிரிழந்துள்ளனர். குண்டுத் தாக்குதலினால் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவு கொல்லப்பட்டது. இதுவரை 245இற்கும் மேற்பட்ட இடங்களில் இனப்படுகொலைகளை இலங்கை அரசு நடத்தியுள்ளது.
இதன் பின்னராவது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் அக்கறை காட்டாமல் மேலும் மேலும் சிறுபான்மை இனத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் புராதன இடங்களைப் பாதுகாக்கின்றோம் என்கிற பெயரில் தமிழர்களை அடக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆயுதப்போராட்டம் முடிவ டைந்து 15ஆண்டுகளை கடந்துள்ள கடந்துள்ள நிலையிலும் இன்றுவரை தமிழினத்திற்கு விடுதலை இல்லை என்கிற போது, 1983 யூலைக் கலவரத்தின் போது நடந்த கொடூர சம்பவங்களையே அரசு மீளவும் நினைவுபடுத்துகிறது. தமிழினம் தனக்கானத் தீர்வினைத் தேடிச் சென்றபோது அதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை என்கிற காலத்தின் கட்டாயத்தினாலேயே ஆயுதமேந்திப் போராட நேரிட்டதே தவிர, தீவிரவாதிகளாக தமிழீழ விடுதலைப்புலிகள் உருவெடுக்க வில்லை. கடல், வான், தரை என முப்படைகளையும் வைத்திருந்த விடுதலைப்புலிகள் 58இற்கும் மேற்பட்ட கட்டமைப்புக்களை வைத்திருந்தார்கள்.
இவ்வாறு வடக்கு கிழக்கில் ஒரு நாட்டுக்குள் தமது கட்ட மைப்புக்களை வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாதிகள் என அரசால் முத்திரை குத்தப்பட்டதுடன் வடகிழக்கில் புராதன விகாரை கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகக்கூறி பௌத்த விகா ரைகளை நிறுவி தொல்பொருள் திணைக்களத்தினுடாக அடா வடித்தனமாக தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தமிழி னம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அபிவிருத்தி – வேலைவாய்ப்பு போன்ற விடயங்களை தமிழ் மக்களுக்குச் செய்துவிட்டால் அல்லது அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தமிழ் அரசியல் வாதிகளுக்குச் சலுகைகளை வழங்கி, தமக்குத் தேவையான வற்றைப் பெற்றுக் கொண்டு, தமிழினத்தையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுகின்ற வேலைகளைத் தான் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலைமைகள் தொடருமாகவிருந்தால் தமிழ் மக்கள் தமக்கான உரிமை களை வென்றெடுக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகும். ஆகவே 20ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்வதன் ஊடாக ஓரளவேனும் தமிழ் மக்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ ஏதுவான நிலைமைகளை அமைத்துக்கொள்ளலாம்.
வெறுமனே அபிவிருத்தி அரசி யலை வைத்து கடந்த காலங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற விடயங்களில் ஈடுபட்டு வந்த தரப்புக்கள் எல்லாம் இன்று தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கின்றோம் என்கிற போர்வையில் ஏமாற்று அரசி யலைச் செய்து வருகின்றார்கள்.
தமிழ் மக்களும் இவர்களை நம்பி வாக்களித்து தற்போதும் பெரும் ஏமாற்றத்துடனேயே வாழ்ந்து வருகின்றார்கள். கடந்த காலங்களில் 22 ஆசனங்களோடு பாராளுமன்றில் பலமாக இருந்த தமிழ்த் தரப்பு, இன்று அரசு திட்டமிட்டு கட்சிகளை உடைத்து பலவீனத்தை ஏற்படுத்தி சலு கைகளை வழங்கி தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு இன்று இல்லாத அளவிற்கு நிலமை மாறியுள்ளது
கடந்த காலங்களில் கிழக்கில் மாகாண சபையை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிவரும் காலங்களில் வடக்கு மாகாண சபையையும் இழக்கவேண்டும் என்கிற நிலை யினைக் கருத்திற்கொண்டே அரசாங்கம் நன்கு திட்டமிட்டு வட கிழக்கில் தேர்தல் காலங்களில் சுயேட்சைகளைக் களத்தில் இறக்கி தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலை மைகள் தொடருமாக இருந்தால் பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி மன்றம் என சகல தேர்தல்களிலும் வெற்றி பெற்று தமிழ் மக்களை தமது பிடிக்குள் கொண்டுவரும் அதேநேரம், இந்த நாட்டில் இடம்பெற்றது பயங்கரவாதமே தவிர அரசு இனப்படுகொலையினை மேற் கொள்ளவில்லை என்கிற செய்தியினையே இவர்கள் சர்வதேசம் வரை கூறப் போகின்றார்கள்.
ஆகவே தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் என்கிற போர்வையில் நடத்தப்படும் செயற்பாடுகளை முதலாவதாக தடுத்து நிறுத்தவேண்டும். தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த மறவர்களையும், மக்களையும் அஞ்சலி செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தும் நடவடிக்கை களுக்கு எதிராக தமிழினம் களத்தில் இறங்கவேண்டும். தமிழ் அரசியல் தலைமைகளை நம்பிப் பயனில்லை. தியாகி திலீபன் ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திரத் தமிழீழம் மலரும்’ என்று இறுதியாகக் கூறியதைப்போன்று வடக்கிலும், கிழக்கிலும் ஒரு மக்கள் புரட்சி வெடிக்கவேண்டிய தேவை சிறுபான்மை இனத்திற்கு கட்டாயமாக உள்ளது. மக்கள் புரட்சிக்கு முன்பாக எந்தவொரு அரசாங்கமும் ஈடுகொடுக்க முடியாது. தொடர்ந்தும் எம்மினத்தை ஆயுதமுனையின் மூலமாக அடக்கிவிட முடியும் என்று இவ்வரசு கனவுகாண்பது தவறு.
நீண்ட காலம் சீனாவும், இந்தியாவும் இவர்களுக்குக் கைகொடுப்பார்கள் என்று அரசு நம்பியிருக்கிறார்கள். அரசி யல் என்பது காலத்திற்குக் காலம் மாற்றம் பெறுபவை. கடந்த காலங்களில் இந்தியா விடுதலைப்புலிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கியது. அதுபோல் எதிர் காலங்களில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஆயுதப் பயிற்சிகளை வழங்கி இந்த நாட்டுக்குள் வீரர்களை அனுப்பவும் முடியும். ஆகவே தமிழ் மக்கள் தமக்கான மாற்றுவழியைத் தெரிவுசெய்து தீவிரமாக, நிதானத்துடன் செயற்படவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என் பதையே நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இரணியன் thinappuyal news