ஐக்கிய தேசியக்கட்சி ஜே வி பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து புதிய எதிர்க்கட்சி முன்னணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளன.
இதற்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட தினத்தன்று வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முன்னணி நீதிக்கான இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் கொழும்பு 2 முத்தையா பார்க்கில் அன்றைய தினம் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தை வெளியிடவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி முன்னணி(ஜேஓஎப்) என்ற பெயரில் இயங்கவுள்ள இந்த முன்னணி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் 18வது அரசியலமைப்பை ரத்துச்செய்தல் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குதல் என்ற அடிப்படைகளை கொண்டு இயங்கவுள்ளது.
– See more at: http://www.newstamilwin.com/show-RUmszBTcKXfw0.html#sthash.zuTBDd8g.dpuf