ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல்?

626

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கு தேவையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2010ம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தது.

இதன்படி, எதிர்வரும் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தற்போதைய நாடாளுமன்றின் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது.

எனினும், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஓராண்டின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தல் நடாத்த ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து முதலில் பொதுத் தேர்தல் நடாத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

SHARE