ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் அவசர கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டடிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு குறித்த தீர்வினை வழங்குமாறு கோரியே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதங்களை எழுதியுள்ளனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதிவியிலிருந்து ஜனாதிபதி விலக்க வேண்டும் அல்லது அவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனக் கோரியும் அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனக் கோரியும் கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ( 31.05.2019 )உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் தேரரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.