வடக்குக்கு மூன்றுநாள் பயணமாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று செவ்வாய்க்கிழமை தீவகத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, பின்னர் நெடுந்தீவு மத்திய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இதேவேளை வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார். அத்துடன் மின்சாரசபையின் பாவனையாளர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இதேவேளை, நயினாதீவு நாகவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நாகவிகாரை விகாராதிபதியையும் சந்தித்தார். அத்துடன் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, காரைநகர் தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வுகூடங்களையும் ஜனாதிபதி திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.