ஜப்பானில் கடும் பனிப்பொழிவு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்!

351

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகளில் படிந்துள்ள பனிப்படலத்தில் அவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

4 ஆண்டுகளில் முதன்முறையாக டோக்கியோவில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக டோக்கியோ கேட் (Tokyo Gate) பாலத்தில் ஒரே நேரத்தில் 100 வாகனங்கள் சிக்கிக்கொண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோன்று பனி காரணமாகத் டோக்கியோவில் பல விமானச் சேவைகளும் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

           

SHARE