ஹன்சிகா குளித்ததுபோல் ஐஸ் தண்ணீரில் குளிக்க மறுத்திருக்கிறார் ரம்யா.நரம்பு சம்பந்தப்பட்ட நோய் ஒன்றிற்காக உலகம் முழுவதும் நன்கொடை வசூலிக்கும் ஏஎல்எஸ் என்ற அமைப்பு விஐபிகளிடம் நன்கொடை வசூலிக்கிறது. தர மறுக்கும் விஐபிக்கள் ஐஸ் தண்ணீரை தலையில் கொட்டிக்கொள்ள வேண்டும் அத்துடன் தனக்கு தெரிந்த 3 பேர்களுக்கு ஐஸ் தண்ணீரில் குளிக்க சவால்விட்டு நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஐஸ் தண்ணீர் குளியல் சவாலில் உலகம் முழுவதும் பல்வேறு விஐபிக்கள் பங்கேற்று வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை ஹன்சிகா ஐஸ் குளியல் போட்டார். அதேபோல் ‘குத்து ரம்யாவுக்கு இந்த சவால் விடப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது,‘ஐஸ் தண்ணீர் குளியல் எப்போது செய்யப்போகிறேன் என்று நிறையபேர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரொம்பவும் ஸாரி.. அதுபோல் எண்ணம் எனக்கு இல்லை. இதற்காக என்னை நியமித்தவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த குளியலின்போது பலர் ஜாலியாக செய்கிறார்கள். இது எந்தவகையிலும் குறிப்பிட்ட அமைப்பின் நோகத்துக்கு உதவியாக இல்லை. நானும் போர் அடிக்கவிரும்பவில்லை. எந்த சவாலுக்கும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இதுபோல் சவாலில் எனக்கு இஷ்டமில்லை. ஆனால், நன்கொடை அளிப்பேன். தண்ணீரை வீணாக்க மாட்டேன்