ஜாம்பவானை பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்த வீரர்! முதலிடத்தில் முத்தையா முரளிதரன்

99

 

அவுஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஏழாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

நியூசிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியில் நாதன் லயன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். இத்துடன் ஒட்டுமொத்தமாக 521 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 8-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

அஸ்வினை பொறுத்தவரை அவர் 507 விக்கெட்கள் வீழ்த்தி 9-ம் இடத்தில் இருக்கிறார்.

நாதன் லயன், அஸ்வின் என இருவருமே சமீபத்தில் தான் 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கின்றன.

இந்நிலையில் அடுத்து 600 விக்கெட்களை யார் முதலில் கைப்பற்றப் போவது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு இந்திய அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் அஸ்வின் விரைவில் 600 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்ட வாய்ப்பு உள்ளது.

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்
முத்தையா முரளிதரன்- 800
ஷேன் வார்னே- 708
ஜேம்ஸ் ஆண்டர்சன்- 698
அனில் கும்ப்ளே- 619
ஸ்டூவர்ட் பிராட்- 604
கிளென் மெக்ராத்- 563
நாதன் லயன்- 521
கொட்னி வால்ஷ்- 519
ரவிச்சந்திரன் அஸ்வின்- 507
டேல் ஸ்டெய்ன்- 439

SHARE