ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்- யார் தெரியுமா?

88

 

சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவியை தாண்டி வெற்றிகரமாக தொடர்களை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி ஜீ தமிழ்.

இதில் வெற்றிகரமாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி கடந்த வருடம் மே மாதம் 22ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு தொடர் அண்ணா.

துர்கா சரவணன் இயக்கத்தில் ராஜாம்மாள் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

வெளியேறிய பிரபலம்
இதுவரை 200 எபிசோடுகளுக்கு மேல் தொடர் ஒளிபரப்பாகி இருக்கிறது, கதைக்களமும் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

தற்போது என்ன தகவல் என்றால் வெங்கடேசன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வெளியேற அவருக்கு பதில் அஜய் பாரதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதோ அவரது புகைப்படம்,

SHARE