ஜூனியர் கால்பந்து கிண்ணத்தை வென்ற ரொனால்டோவின் மூத்த மகன்! பெருமையுடன் வெளியிட்ட பதிவு வைரல்

103

 

தனது மகன் விளையாடிய அல் நஸர் ஜூனியர் அணி, U13 சேம்பியன் கிண்ணத்தை வென்றது குறித்து ரொனால்டோ பதிவிட்ட ட்வீட் வைரலாகியுள்ளது.

கிறிஸ்டியானோ ஜூனியர்
U13 சேம்பியன் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், அல் நஸர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல் ஷபாப் அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

அல் நஸர் அணியில் போர்த்துகல் நட்சத்திரம் ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ஜூனியர் விளையாடியிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் கிறிஸ்டியானோ ஜூனியர் தனது சொந்த பதக்கத் தொகுப்பைத் தொடங்கியுள்ளார்.

வைரல் பதிவு
அவர் தனது பிரபலமான தந்தையின் புகழ்பெற்ற அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

மகனின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), தனது எக்ஸ் பக்கத்தில் ‘வாழ்த்துக்கள் டீம்’ என மகன் கிண்ணத்தை வென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது ரொனால்டோவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

SHARE