ஜெனிலியா கணவர் படம் சென்சார் போர்டு எதிர்ப்பு 

463

 

ஜெனிலியா கணவர் நடித்த படத்தில் இடம்பெறும் வசனத்துக்கு தடை விதித்தது சென்சார் போர்டு. சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவரது கணவர் பாலிவுட் ஹீரோ ரிதேஷ் தேஷ்முக். தற்போது ஜெனிலியா கர்ப்பமாக இருக்கிறார்.  கணவர் நடித்த ஏக் வில்லன் பட நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார். இப்படம் சென்சாருக்கு சென்றது. படத்தை பார்த்த அதிகாரிகள் சில வசனம் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஸ்டன்ட் காட்சியின் நீளம்போன்றவற்றை நீக்க உத்தரவிட்டனர்.

 

படத்தில் ஹஜாம் என்ற வசனம் இடம்பெற்றது. ஹஜாம் என்றால் முடிதிருத்துபவர் என்று அர்த்தம். இந்த வார்த்தை சில சமூகத்தினரின் எதிர்ப்பை உருவாக்கும். எனவே அந்த வசனத்தை சைலன்ட் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 இடங்களில் தணிக்கை குழு கட் செய்ய உத்தரவிட்டது. இதை பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஏற்றுக்கொண்டார்.  ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு ஷாருக்கானின் படத்துக்கு பில்லு பார்பர் என டைட்டில் வைக்கப்பட்டதற்கு சலூன் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தலைப் பில் பார்பர் என்பது நீக்கப்பட்டது.

 

SHARE