ஜெனிவாவில் திரையிடப்பட்ட சனல் 4 வீடியோ தொடர்பில் TNA ,வடமாகாணசபை அக்கறை காட்டாதது தழிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படித்தி உள்ளது

521

TNA  tna-600-400

no fire zone1சனல் 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஷோன் என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது.

ஐநாவின் 23 வது அறையில் அது திரையிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்தப் படத்தை அங்கு திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தபோதிலும், ஐநாவில் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படையில் அது அங்கு திரையிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வலயத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள், சிறுவர்கள் இந்தப் போரினால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பல விடயங்களை அந்தப் படம் காண்பித்ததாகவும், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் மற்றும் சிறுவன் பாலச்சந்திரனின் கொலை குறித்த தகவல்கள் ஆகியனவும் அதில் அதிகம் இடம்பெற்ற்றுள்ளது.
அந்த மண்டபத்துக்கு வந்திருந்து இலங்கையின் ஆட்சேபத்தை தெரிவித்த ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க அவர்கள், இந்தப் படம் புனையப்பட்ட காட்சிகளை காண்பித்தது என்று கூறியிருக்கிறார்.

no fire zone2
அதனைத் தொடர்ந்து அங்கு பேசிய இலங்கையில் நடந்த போர் நிகழ்வுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐநா மன்ற செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவைச் சேர்ந்த ஜாஸ்மின் சூகா அவர்கள், இலங்கை போர் நிகழ்வுகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்பதை இது உறுதி செய்கிறது என்று கூறியுள்ளார்.

அதே சமயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் பற்றி உரையாற்றியுள்ளார். அங்கு அவர் கூறியுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று சிவில் சமூக அமைப்புக்கள் குற்றம்சாற்றியுள்ளன.

சமரசிங்க தன உரையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும், அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தரப்புவாதங்களை முன்வைத்துப் பேசிய அமைச்சர் மஹிந்த சமரசசிங்க, மனித உரிமைகள் நிலமைகள் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இந்தத் தீர்மானம் தமது அபிப்பிராயப்படி தேவையற்ற ஒன்று என்று கூறியிருந்தார்.

tna.mini5_ஆனால் இலங்கையில் மனித உரிமைகள் சூழலில் முன்னேற்றமில்லை என்று உள்ளூர் சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.
படையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் மஹிந்த சமரசிங்க தெரிவித்தது முழு பூசணியை மறைக்கும் நடவடிக்கை என்று பெண்கள் நடவடிக்கை வலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா தெரிவித்தார்.

படையினரிடம் தமது உறவினர்களை கையளித்த பலருக்கு அவர்களின் நிலை என்னஆனது என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். “இலங்கை அரச நிர்வாகத்தில் இராணுவ குறுக்கீடு இல்லை என்று அரசு கூறுகிறது ஆனால் வடக்கே இரண்டு லட்சம் இராணுவத்தினர் இருக்கின்றனர். நிரந்தர கட்டமைப்புகளையும் இராணுவம் உருவாக்கி வருகிறது. பாலர் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தைக்கூட இராணுவம்தான் வழங்குகிறது,” என்றார் அவர்.

அரசு சாரா நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் அவர்களால் செயல்பட முடியாமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE