ஜெனிவா மைதானத்தில் இனப்படுகொலை ஒளிப்பட கண்காட்சி

375

 

IMG_0190ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கும் இவ்வேளையில் ஜெனிவா மைதானத்தில் இனப்படுகொலை ஒளிப்பட கண்காட்சி ஒன்றை புலம்பெயர் தமிழீழ செயற்பாட்டாளர் கஜன் நடத்தி வருகிறார்.

ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் கடந்த நான்கு வருடங்களாக இப்படங்களை அவர் காட்சிப்படுத்தி வருகிறார். இம்முறையும் நேற்றிருந்து இப்படங்களை அவர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

சிறிலங்கா அரசின் இனஅழிப்பை சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தவதற்காக தான் இம்முயற்சியை மேற்கொண்டிருப்பதாகவும் இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.IMG_0189IMG_0190



SHARE