ஜெனீவா தீர்மானங்களும் அரசியல்வாதிகளின் மாறுபட்ட கருத்துக்களும்

890

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான கடந்த கால பேச்சுவார்ததைகளை உற்றுநோக்கும் போது அவை அனைத்துமே எந்தவித சாதகத்தன்மையாக அமை யாதபோதிலும் இனி நடக்கப்போகும் பேச்சுக்கள் சாதகமாக அமையும் என்று கூறுமுடியாது. ஆனால் மனிதநேயம் கொண்ட நாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என செயற்பட்டுவருகின்றனர்.

காணாமற்போனோர் தொடர்பிலும் காணிகள் அபகரிக்கப்பட்டமை தொடர்பிலும் தமிழ்மக்களுக்கான ஒரு தீர்வுத் திட்டத்தினை உரிய முறையில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மாகா ணசபையிலும், பாராளுமன்றத்திலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் இலங்கை யரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது எடுத்துக்கூறியிருக்கின்றது.

இனப்படுகொலை என்கின்ற விடயத்தை அங்கு முன்வைக்கவோ அதனை தகுந்த முறையில் எடுத்துச்சொல்லவோ சந்தர்ப்பங்கள் இல்லாமல் போயுள்ளது. தற்பொழுது பல அரசியல் ஆய்வாளர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட விடயமாக மேற்குலக நாடுகள் தமது சொந்த காரணங்களை முன்வைக்கும் அடிப்படையிலேயே நடந்துகொள்வதாகவும் தமது அரசி யல் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் நோக்கிலேயே செயற்படுவதாகவும் கூறியிருக்கின்றன.

அரசியல் என்பது கருத்துக்கள் கூறுவதிலும், அதனை சரிவர செயற்படுத்துவதிலும், அரசியல் வாதிகள் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்வதும் அரசியல் பயணத்தின் ஒரு பகுதியா கும். மக்களை எல்லாவற்றிற்கும் கேடயமாக வைத்து இவ்வரசியல் வாதிகள் செயற்பட்டுவருகின்றனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களினுடைய ஒருசிலரது கருத்துக்களும் தமிழ்மக்களுடைய அரசி யல் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக அமைகின்றது. தமிழ் மக்களினது ஒற்றுமை நிலைநிறுத்தப்படவேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலம் அதிகரிக்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.

ஜெனிவா சென்று சுய விருப்பங் களுக்காக தமது நிலைப்hபடுகளை மாற்றிக் கொள்ளக்கூடாது. காரணம் தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் போராட்டத்தின் வழியேவந்தவர்கள். அதனுடைய வலியைபுரிந்து கொள்ளவேண்டும். நம் நாட்டில் நடைபெற்றது இனச்சுத்திகரிப்பே. அதற்காக எத்தனையோ உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு எம் தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக செயற்படவேண்டும். இவ் ஜெனிவா மகா நாடு தொடர்பில் அரசியல்வாதிகளின் கருத்துக்களை உற்றுநோக்குவோமாக விருந்தால் ஏதோ ஒரு வகையில் குழப்பமான கருத்துக்களாகவே அமைகின்றது. அந்தவகையில் சில கருத்துக்களை பாரக்கின்றபொழுது,

இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார். ஹம்பகாவில் நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றிய அவர், ‘எந்த அனைத்துலக சவாலையும் எதிர்கொள்ளும் வலிமை இலங்கைக்கு உள்ளது. ஏகாதிபத்தியவாதிகளுக்கோ அவர்களின் அடிவருடிகளுக்கோ நாம் அடிபணியமாட்டோம். இந்த நாட்டின் மக்களுக்கு மட்டுமே, அரசாங்கத்தை மாற்றுகின்ற அதிகாரம் உள்ளது. மக்களின் ஆதரவு இல்லாமல், ஐ.நாவில் உள்ள எந்தவொரு வெளிநாட்டு சக்தியாலும். அரசாங்கத்தை அகற்ற முடியாது.

மக்களின் முன்பாக எமது தலை களை குனிந்து கொள்ள நாம் தயா ராக இருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியவாதிகளின் முன்பாகவோ, கடின முயற்சியின் மூலம் பெறப்பட்ட அமைதியையும், சுதந்திரத்தையும் காட்டிக் கொடுத்த அவர்களின் அடிவருடிகள் முன்பாகவோ நாம் தலைவணங்கமாட்டோம். மக்களின் தீர்ப்பின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டில் உள்ள எல்லா மக்களும் பயன டையத்தக்கவகையில், பாரிய அபிவிருத்திப் பணிகளை முறைப்படியாக மேற்கொண்டுள்ளோம்.

பலவந்தமாக கடத்தி காணாமற்போகச் செய்தலை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக நடைமுறைப்படுத்துதல் என்ற விடயத்தை தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளடக்குமாறு வலியுறுத்துவதாக இந்தப் பிரேரணை அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றினை வலியுறுத்துவதாக இந்தப் பிரேரணை அமைவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. உள்நாட்டில் விசாரணைப் பொறிமுறை ஒன்றினை அமைத்து உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்று கடந்த ஆண்டு அமெரிக்கத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், நம்பகத்தன்மை வாய்ந்ததாக இந்த உள்நாட்டு விசாரணைப் பொறி முறை அமையவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றன. எனவே சர்வதேசப் பொறிமுறை ஒன்று அவசியம் என்று வலியுறுத்தப்படலாம் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை யில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டு வரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசார ணையைக் கோருவதையே நோக்காகக் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை என்கின்ற சொற்பதம் அந்தப் பிரேரணையின் முன்வரைவில் இல்லை என்பதற்காக, அதனை பொறுப்பற்ற முறையில் எதிர்க்க முடியாது. ஜெனீவா பிரேரணையின் முன்வரைவில் அடங்கியுள்ள விசா ரணை கோரிக்கைகள் தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதை நோக்காகக் கொண்டது. அந்த நோக்கத்தை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. அதேநேரம், தமிழ் மக்களுக்குத் தேவையான அரசி யல் தீர்வு, வடக்கு கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி களை மீட்டல் போன்ற விடயங்களை எட்டக்கூடிய விதத்தில் இந்தத் தீர்மானத்தில் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெறவேண்டும் என்றும் அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, ‘மனித உரிமைகள் உயர் ஆணையர் தனியான விசாரணை நடத்தவேண்டும்’ என்று தீர்மானத்தின் முன்வரைவு கூறுகின்றது.

ஐநா மனித உரிமைகள் உயர் ஆணை யர் நடத்துகின்ற விசாரணை, சர்வதேச விசாரணையாகவே இருக்க முடியும். சர்வதேச விசாரணை என்ற சொற்பதம் இல்லை என்பதற்காக அதனை நாங்கள் எதிர்க்க முடியாது. மக்களின் பிரதி நிதிகள் என்றவகையில் மிகவும் நிதா னமாக, அவதானமாக, பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருக்கிறது. அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கிறது, நாங்களும் அதனை எதிர்த்தால் சர்வதேச சமூகம் தமிழர் பிரச்சனையை இலகுவாக கைகழுவி விட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது என்று கூறி னார் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு அரசி யல் தீர்வினைவிட அபிவிருத் தியே முக்கியம் என்று பிதற்றியுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜெனீவா தொடர்பாக ஊடகவியலார்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜெனீவா தொடர்பாக எதுவும் பேச முடியாது என்று மழுப்பிக் கொண்டு ஊடகவியலாளர் மத்தியில் இருந்து வில கியும் சென்றுள்ளார்.

மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மருத்துவம் மற்றும் நிர்வாக ரீதியான உதவிகள், வேலைத்திட்டங்கள் என்பனவற்றினை முன்னெடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இவ்வாறான உதவிகளை ஜப்பான் நாட்டு அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முக்கியம் தேவை அபிவிருத்தியே தவிர அரசியல் தீர்வு இல்லை.

அமெரிக்காவின் பிரேரணை முன்வரைபை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, தலை வர் இரா. சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றிவிட்டது’ என்று கடந்த வாரம் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட சில தலைவர்கள் கூறியிருந்தனர். இலங்கையில் உள்ளக விசா ரணை நடைபெறவேண்டும் என்றும் அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, ‘மனித உரிமைகள் உயர் ஆணையர் தனியான விசாரணை நடத்தவேண்டும்’ என்று தீர்மானத்தின் முன்வரைவு கூறுகின்றமையை சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கத் தீர்மானம் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணே சனும் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேர வையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்று வரும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்கள் இன்று ஏமாற்றமடைந்து நிற்பதாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள தீர்மானம் பெரிய அழுத்தங்களை வழங்கவில்லை. குறித்த தீர்மானத்தில் அரசியல் கைதிகள், சரணடைந்தவர்கள் மற்றும் இன அழிப்புத் தொடர்பாக எது வுமே குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. இன அழிப்பிற்கு சர்வதேசம் நீதியான தீர்வொன்றினை தராத பட்சத்தில், எமது இளம் சமூகம் மாற்றுவழிகளை தேடிக்கொள்ளுமானால் அஹிம்சை பேசிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளே அதற்கு பொறுப்பாக வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அங்கு இராஜதந்திரிகளுடன் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக எது வுமே பேசியிருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அனந்தி சசிதரன், தன்னை முன்னாள் போராளியொருவரின் மனைவி என்கிற காரணத்தினால் பேசவே அனுமதிக்கவில்லை என்றார்.

இவ்வாறு இலங்கையின் பல அரசி யல்வாதிகள் ஒரு சாரார் விசா ரணை தேவை என்றும் இன்னொரு சாரார் விசாரணை தேவையில்லை என்றும் கூறிவருகின்றனர். மற்றுமொரு ஆயதப் போரினை அமெரிக்க அரசு விதைக்கின்றது என்றே கூறவேண்டும். வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்தின்படி சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நாவின் நேரடி தலையீடு இன்றி ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இயலாது என அவர் கூறினார். போர் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய 5 ஆண்டுகள் இலங்கைக்கு கால அவ காசம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசு தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் தமிழ் சமூகம் ஐ.நா.வின் உதவியை பெரிதும் நம்பி இருப்பதாகவும், நில அபகரிப்பு, சிங்களவர் குடியேற்றம், இராணுவ அத்துமீறல், மனித உரிமை மீறல் உள்ளிட்ட செயல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதா கவும் குற்றஞ்சாட்டப்பட்;டிருக்கிறது. எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி சுயநலம் கருதாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டால் அது நன்மை பயக்கும் விடயமாக அமையும்.

இரணியன்

SHARE